app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?

mathimaran.wordpress.com-வைகுண்ட பதவியை அடைய பெரியார் பாணி்;ஜுனியர் விகடன் அழைக்கிறது

Attention: open in a new window. PDFPrintE-mail

ந்தை பெரியார் திராவிடர் கழகம், பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் கருவறை நுழைவுப் போராட்டதை அறிவத்துள்ளது.

‘இந்து மக்கள் கட்சி’ என்ற ஒன்று, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘கோயில் கருவறையில் நுழையும் நீ உன் தாயின் கருவறையில் நுழைவாயா?’       ‘கருவறைக்குள் நுழைந்தால் கல்லறைக்குள் செல்வாய்’ என்று ‘பஞ்ச்’ டயலாக்கோடு சென்னை நகரமெங்கும் சுவரொட்டி ஒட்டி உள்ளது.

தினமும் கோயில் கருவறைக்குள் பலமுறை சென்று வருகிறார்களே அர்ச்சகர்கள், குருக்கள், பட்டாச்சாரிகள், தீட்சிதர்கள் அவர்கள் எல்லாம் தங்கள் தாயின் கருவறைக்குள் சென்று வருகிறார்கள் என்று அர்த்தமாகாதா?

இப்படி அர்ச்சகர்கள், குருக்கள், பட்டாச்சாரியார்கள், தீட்சிதர்களை இந்து மக்கள் கட்சி அவமானப்படுத்தலாமா?

அது மட்டுமல்ல, ‘கருவறைக்குள் நுழைந்தால் கல்லறைக்குள் செல்வாய்’ என்பது அர்ச்சகர்கள், குருக்கள், பட்டாச்சாரிகள், தீட்சிதர்களை கொலைகாரர்கள் போல் சித்தரிப்பது முறையா?

பெரியார் தொண்டர்களை கேவலப்படுத்த நினைத்து ஆத்திரத்தில், இப்படி அறிவிழக்கலாமா? அதனால்தான் பெரியார் ‘கடவுளை மற; மனிதனை நினை’ என்றார்.

*

இன்று (22-12-2012) காலை தோழர் ஆறுமுகம் (பி.எஸ்.என்.எல்) தொலைபேசியில் அழைத்தார். பெரியா் நினைவு நாளன்று வைத்திருக்கும் தன் மகளின் திருமணத்திற்கு மறந்துவிடாமல் வரவேண்டும் என்று நினைவூட்டினார். முன்பே நேரிலும் தன் துணைவியாரோடு வந்து அழைத்திருந்தார்; இருந்தாலும் அவருக்கு ஒரு சந்தேகம்; நான் வாரமல் போய்விடுவேனோ என்று.

அப்போது அவர்தான் சொன்னார், ‘ஜுனியர் விகடனில் கருவறை நுழைவுப் போரட்டத்தைப் பற்றி செய்தி வந்திருக்கிறது. அதில் பெரியார் பற்றி  ஏடாகூடமான ஒரு குறிப்பும் வந்திருக்கிறது. அதை பாருங்கள்.’  என்று அந்தப் பக்கங்களை ஸ்கேன் செய்து அனுப்பியும் வைத்தார்.

கோயில் கருவறை நுழைவுப் போராட்டதைப் பற்றிய செய்தி வெளிட்ட ஜுனியர் விகடன், ‘கபாலீ்ஸ்வரர் கோயில் கலாட்டா!’ என்று தலைப்பிட்டு,  அதற்குள் பெட்டி செய்தியாக ஒரு குட்டி செய்தியை வெளியிட்டிருக்கிறது:

பெரியாரும் வைகுண்ட ஏகாதசியும்!

மூடநம்பிக்கை ஒழிப்பு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, கடவுள் மறுப்பு என்று தனது வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிட்ட பெரியார் 1973-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி காலமானார். அன்று வைகுண்ட ஏகாதசி. அதற்குப் பிறகு 39 ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டுதான் பெரியார் நினைவு நாளும் வைகுண்ட ஏகாதசியும் ஓரே நாளில் வருகிறதாம்.’

இப்படி ஒரு கண்டுபிடிப்பின் மூலம் தன் வாசகர்களுக்கு என்ன சொல்லவருகிறது என்பதையும் ஜுனியர் விகடன் தெளிவாக சொல்லியிருந்தால், நாம் அதைப் பற்றி விளக்கி எழுத வேண்டிய தேவை எழுந்திருக்காது.

அநேகமாக தன் வாசகர்களுக்கு குறிப்பாக வைணவ வாசகர்களுக்கு, ‘நீங்கள் வைகுண்ட பதவியை அடைய வேண்டுமானால், இனி பெருமாளை வணங்குவது, திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு அடிக்கடி செல்வது, விரதம் இருப்பது; குறிப்பாக வைகுண்ட ஏகாதசி அன்று கண்முழித்து விரதம் இருப்பது இதெல்லாம் தேவையில்லை.

பெரியார் வழியில் கடவுளை எதிர்த்து திவீரமாக பிரச்சாரம் செய்யுங்கள். குறிப்பாக ராமன் படத்தை செருப்பால் அடியுங்கள். நீங்கள் வைகுண்ட பதவிக்கு செல்லலாம்.

வாருங்கள் வைணவர்களே, பக்தர்களே; பெரியார் போல் ராமன் படத்தைச் செருப்பால் அடித்து, வைகுண்ட பதவியை அடைவோம்.

என்று அறிவிப்பதாக இருக்கிறது ஜுனியர் விகடனின் ‘அரிய’ பெரியார் பற்றிய புதிய தகவல்.

 

http://mathimaran.wordpress.com/2012/12/22/595-1/