தந்தை பெரியார் திராவிடர் கழகம், Thanthai Periyar Dravidar Kazhagam, Periyar, Songs, Videos, Audios, Images, Photos, News, Aanuur Jagadesan, Advocate Duraisamy, Ku.Ramakritinan, Ku.Ramakrishnan http://puthiyathalaimurai.tv-இலங்கையின் குமார தர்மசேனா நடுவராக பணியாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு
app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?

http://puthiyathalaimurai.tv-இலங்கையின் குமார தர்மசேனா நடுவராக பணியாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு

Attention: open in a new window. PDFPrintE-mail

சென்னை டெஸ்ட் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த குமார தர்மசேனா நடுவராக பணியாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரை தமிழகத்திவிருந்து வெளியேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கயை சேர்ந்த நடுவர்:
சென்னையில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கையை சேர்ந்த குமார தர்மசேனா நடுவராக பணியாற்றி வருகிறார். இவரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றக் கோரி பெரியார் திராவிட கழகத்தினர் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகவும் குமார தர்மசேனாவை வெளியேற வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகை:
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று மைதானத்திற்குள் நுழைய முற்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி, போலீசார் கைது செய்தனர். இனப்படுகொலை நடந்த இலங்கையைச் சேர்ந்தவர்களை அனுமதிக்கக் கூடாது என்று பெரியார் திராவிடர் கழகத்தினர் தெரிவித்தனர்.

கறுப்பு சட்டைக்கு தடை:
இதற்கிடையே பெரியார் திராவிடர் கழகத்தின் ஆர்ப்பாட்ட அறிவிப்பை தொடர்ந்து, இன்று காலை முதல் சேப்பாக்கம் மைதானத்திற்குள் கறுப்பு சட்டை அணிந்து வந்த ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. சென்னையில் வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஆசிய தடகள போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது இலங்கை நடுவருக்கு எதிராக பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் நடுவரை மாற்ற முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

 

http://puthiyathalaimurai.tv/vigorous-opposition-for-kumara-dharmasena-serving-as-umpire-in-1st-test-match-in-chennai