தந்தை பெரியார் திராவிடர் கழகம், Thanthai Periyar Dravidar Kazhagam, Periyar, Songs, Videos, Audios, Images, Photos, News, Aanuur Jagadesan, Advocate Duraisamy, Ku.Ramakritinan, Ku.Ramakrishnan http://www.maalaimalar.com/-மத்திய அரசை கண்டித்து சி.பி.எஸ்.சி. அலுவலகம் முற்றுகை: 200 பேர் கைது
app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?

http://www.maalaimalar.com/-மத்திய அரசை கண்டித்து சி.பி.எஸ்.சி. அலுவலகம் முற்றுகை: 200 பேர் கைது

Attention: open in a new window. PDFPrintE-mail

கோயம்பேடு, ஜூலை. 28–

ஆகஸ்ட் மாதம் 7–ந் தேதி முதல் 13–ந் தேதி வரை சமஸ்கிரிதவாரம் பள்ளிகள் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் சுற்றரிக்கை விட்டது. இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந் நிலையில் சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளியின் தென் மண்டல அலுவலகத்தை இன்று காலை 11 மணிக்கு தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், அம்பேத்கார் மக்கள் இயக்கத்தினரும் சேர்ந்து மத்திய அரசின் சமஸ்கிரித மொழி திணிப்பை எதிர்த்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதற்கு தந்தை பெரியார் திராவிட கழகத்தின் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். இதில் பொது செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் உள்பட 200 பேர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மத்திய அரசை நோக்கி சமஸ்கிரித வாரத்தை திரும்ப பெற வேண்டும் மாற்று சுற்றரிக்கை அனுப்ப வேண்டும் என்று கோஷமிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அண்ணா நகர் உதவி கமிஷனர் நந்த குமாரி, திருமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், அமைஞ்சிகரை இன்ஸ் பெக்டர் ஆரோக்கிய ரவிந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகையில் ஈடுபட்ட 200 பேரை கைது செய்தனர்.

 

http://www.maalaimalar.com/2014/07/28135755/central-government-condemn-cbs.html