app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?

naantamilan.com-கேரளாவுக்குள் நுழைய முயன்ற சர்வ கட்சியினர் 2,000 பேர் கைது: பவானி ஆற்றில் அணை கட்டும் முயற்சி

Attention: open in a new window. PDFPrintE-mail

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த அனைத்து கட்சி யினர் கேரளாவிற்கு செல்ல முயன்றனர். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாயத்துக்கு ஆதாரமாக உள்ளது பவானி ஆறு. பவானி ஆற்றில் அட்டப்பாடி அகழி சித்தூரில் கேரளா ரூ.400 கோடியில் தடுப்பணை கட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கையை தமிழகத்திலுள்ள அரசியல் கட்சியிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். கேரளாவின் போக்கை கண்டித்து அணை கட்டும் இடமான அட்டப்பாடி அகழி சித்தூரில் பல்வேறு கட்சியினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

திட்டமிட்டப்படி நேற்று காலை 8 மணிக்கு தமிழக & கேரள எல்லையான ஆனைகட்டி பகுதியில் திமுக, மதிமுக, இந்திய கம்யூ., பாமக, விடுதலை சிறுத்தை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், கொமுக, புதிய தமிழகம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, கொங்கு இளை ஞர் பேரவை, எஸ்டிபிஐ, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, தலித் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை, தமிழ் புலிகள், லோக் சத்தா கட்சி, தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி, தமிழர் விடுதலை இயக்கம், தமிழக இளைஞர் முன்னணி, பியுசிஎல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்தேசிய கட்சி, சமுதாய முன்னேற்ற சங்கம், பெரியார் மாணவர் கழகம், இந்து மக்கள் கட்சி (தமிழகம்), தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது), பீளமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் ஆகிய 29 அமைப்புகள் தங்கள் கொடியுடன் அணி அணியாக ஒன்று திரண்டனர்.

அங்கு கேரள எல்லையான காட்டாற்று பாலத்தின் முன்புறம் தமிழக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பாலத்திற்கு எதிரே கேரள போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தமிழக, கேரள போலீ சாருக்கு இடைபட்ட 100 மீட்டர் தொலைவில் 3 அடுக்கிலான இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து கேரள பகுதிக்குள் செல்ல முயன்ற அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோரை தமிழக போலீசார் கைது செய்தனர். மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் ஆர்.ஆர். மோகன்குமார், ஈஸ்வரன், முன்னாள் துணை மேயர் கார்த்திக்(திமுக) கு.ராமகிருஷ்ணன்(தபெதிக), வால்பாறை எம்எல்ஏ ஆறுமுகம்(இ.கம்யூ), தங்கவேல் பாண்டியன்(பா.ம.க), டாக்டர் சிவசாமி( தமிழக விவசாயிகள் சங்கம்) ஜேம்ஸ்(இளைஞர் பெருமன்றம்) உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

 

http://naantamilan.com/current-affairs/tamilnadu/7753-2,000-people-tried-to-enter-the-party-s-identity-keralavukkul-first-try-to-build-a-dam-on-the-river.html