app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Sunday, 02 September 2012 19:02

பூந்தமல்லி கரையான்சாவடி முகாம் நோக்கி முற்றுகை போராட்டம்

பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு முகாம்களில் இலங்கை தமிழர்கள் பலர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்யக் கோரி இன்று 2-09-2012 முற்றுகை போராட்டம் நடைபெற்றது.


இதற்காக குமணன்சாவடி பஸ் நிலையம் அருகில் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அங்கு அவர்கள் முழக்கம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

1 மணி நேரம் ஆர்ப்பாட்டத்திற்கு  பின் பூந்தமல்லி கரையான்சாவடி முகாம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த சென்றனர் தோழர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கழக  பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன்  உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரையும் பஸ்சில் ஏற்றி திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.

 


Last modified on Monday, 03 September 2012 16:50

Related Video

Image Gallery