app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 05 September 2012 06:43

இந்திய அரசே! சிங்கள ராணுவத்தை வெளியேற்று!!! கேரளா அரசே! பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டாதே!!!பொள்ளாச்சி ஆர்ப்பாட்டம்

இந்திய அரசே! சிங்கள ராணுவத்தை வெளியேற்று!!! கேரளா அரசே! பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டாதே!!! என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் "தந்தை பெரியார் திராவிடர் கழகம்" சார்பில் 04.09.12 செவ்வாய் மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

பொள்ளாச்சியில் நகர செயலாளர் வே.வெள்ளிங்கிரி தலைமையில், மேற்கு மண்டல அமைப்பாளர் கா.சு.நாகராசன், மாவட்ட பொறுப்பாளர்கள் கலங்கல் வேலு, அகில்குமரவேலு, பொள்ளாச்சி நகர பொறுப்பாளர்கள் த.ராஜேந்திரன், கலைராஜேந்திரன், கண்ணன் ஆனைமலை, நகர ஒன்றிய பொறுப்பாளர்-மணிமொழி, சம்பத் வே.அரிதாசு, அப்பாதுரை, ஆனந்த், கிணத்துகடவு கார்த்தி, மாணவர்கள் பிரபாகரன், வெற்றி, சபரி மற்றும் 40 திற்கும் மேற்ப்பட்ட கழக தோழர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி நகரம் முழுவதும் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.

Last modified on Wednesday, 05 September 2012 18:10

Related Video