app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Tuesday, 16 July 2013 17:24

"பெரியார் மாணவர் கழக" மாணவர்கள் கோபால கிரிட்டினான் மற்றும் ஆறுமுகம் அவர்களுக்கு பாராட்டு

அன்னூரில் 7-7-2013 காலை 10 மணிக்கு இராமதாசைக் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்தில் இளவரசன் மரணத்திற்கு முழுப் பொறுப்பான சாதிவெறி அரசியல் நடத்தும் இராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு, வழக்கறிஞர் தொழிலுக்கே இழிவைத் தேடித் தரும் சாதிவெறி வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட பா.ம.க வினரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய் ! தருமபுரியில் கைது செய்த வழக்கறிஞர்கள் ரஜினி,செங்கொடி உள்ளிட்ட 15 பேரை உடனடியாக விடுதலை செய். தர்மபுரியில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விலக்கு!இளவரசனின் மரணத்தை விசாரிக்க சி.பி.ஐ. கமிஷன் அமைத்திடு! தருமபுரியில் 3 கிராமங்கள் எரிக்கப்பட்டது முதல் இளவரசன் மரணம் வரை பதியப்பட்ட வழக்குகளை நடத்த சிறப்பு நீதிமன்றங்களை நத்தம் பகுதியில் அமைத்திடு ! போன்ற கோரிக்கைகளை வலியிறுத்தி கோசமிட்டனர்.

 

பா.ம.க. தலைவர் ராமதாஸ் கொடும்பாவி எரிக்கப்பட்டது. "பெரியார் மாணவர் கழக" மாணவர்கள் கோபால கிரிட்டினான் மற்றும் ஆறுமுகம்
கைதுசெய்யபட்டனர். பின்னர் அவர்கள் 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டனர். 3 நாட்களுக்கு பிறகு இருவரும் 10-7-2013 அன்று ஜாமீனில் வெளியே வந்தனர். இவர்களை பொதுச்செயலாளர் கு.ராமகிரிட்டினான் அவர்கள் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார் !

Last modified on Tuesday, 16 July 2013 17:35