app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Monday, 17 February 2014 13:17

கோவையில் காதலர் தினக் கொண்டாட்டம் !

14-02-2014 கோவை காந்திபுரம் தந்தை பெரியார் படிப்பகத்தில், சுயமரியாதை, சாதிமறுப்புத் திருமணம், 2 (ஜோடிகளுக்கு) இணையர்களுக்கு சுயமரியாதை, சாதிமறுப்புத் திருமணம் காதலர்களுடன் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது! ஏற்கனவே சுயமரியாதை, சாதிமறுப்புத் திருமணம் செய்த பல இணையர்கள் துணைவர்களுடன் வந்து சிறப்புச் செய்தனர்! கேக் வெட்டி, ஊட்டி மகிழ்ந்து, மகிழ்ச்சியையும் கேக்கையும் பகிர்ந்து, உண்டு, மகிழ்ந்து மிகச் சிறப்பாக காதலர் தினம் கொண்டாடினர்! வந்திருந்த அனைவருக்கும் கேக்கும், தேநீரும் வழங்கப்பட்டது! தோழர்கள் வெ.ஆறுச்சாமி, சண்முகசுந்தரம், கோபால், சாஜித், ரஞ்சித், பிரவின், பிரபாகரன், சீனிவாசன், தமிழரசன், பாண்டியன், காளிமுத்து, ஆனந்து மற்றும் தோழர் பொன்.சந்திரன், வழக்கறிஞர் முருகேசன் மற்றும் பெண்கள் பலர் கலந்துகொண்டு காதலர் தினத்தைச் சிறப்பித்தனர்!