app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Monday, 17 February 2014 13:35

கோவையில் காதலர் தின பொதுக்கூட்டம்

காதலர் தின விழா 15-02-2014 அன்று சிறப்பாக கோவையில் நடைபெற்றது. பெற்றோரும், காதலர்களும் சிந்திக்க நல்லதோர் பட்டிமன்றமும், கேலியும் கிண்டலுமாக பகுத்தறிவுக் கருத்துகளுடன் புதுகை பூபாளம் கலைநிகழ்ச்சி எனச் சிறப்பாக நடத்தப்பட்டது ! தந்தைப் பெரியார் திராவிடர் கழகமும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினரும், நடத்தினார்கள் ! சுயமரியாதையுள்ள காதலர்களும், சாதி மத மறுப்புத் திருமணம் செய்த சுயமரியாதைக்காரர்களும், வாரிசுகளும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர் ! சுயமரியாதை சாதி மத மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது ! தோழர்கள், பெண்கள், என பலர் கலந்துகொண்டனர்.

Last modified on Monday, 17 February 2014 13:44