app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Monday, 17 February 2014 13:46

புதுச்சேரியில் காதலர் தின பொதுக்கூட்டம்

புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக பிப்ரவரி-14 சாதி-மதம் ஒழிய காதலர் திருவிழா, சாதி-மத மறுப்பு மணம் புரிந்தோர்க்கு நினைவு பரிசு வழங்கி பாரட்டும் விழா புதுவை தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. கழக மகிளிரணித் தலைவி மு.பவானி வரவேற்புரை நிகழ்த்த கழகப் பிரச்சார அணிச்செயலாளர் தோழர் சிற்பி இராசன் மற்றும் கழக துணை பிரச்சார அணிச்செயலாளர் தோழர் சீனி. விடுதலை அரசு, தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் முத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர். புதுச்சேரி கழகத் தலைவர் வீரமோகன், துணைத்தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேசு, இளைஞரணித் தலைவர் சிவமுருகன், அரியாங்குப்பம் தொகுதித் தலைவர் பெருமாள், தோழமை அமைப்பை சார்ந்த கவுன்சிலர் சக்திவேல்( பெரியார் பகுத்தறிவு பாசறை) புரட்சிவேந்தன் (லோக் ஜன சக்தி) பாவடைராயன் (புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர்படை) முருகானந்தம் (மனித உரிமைகள் கழகம்) ஆகியோர் உரையாற்றினர். சாதி-மத மறுப்பு மணம் புரிந்த தம்பதிகளுக்கு நினைவு பரிசு வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.இறுதியாக தோழர் சு.காளிதாஸ் நன்றி கூறினார்.நிகழ்வில் ஏராளமாக கழகத் தோழர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Last modified on Monday, 17 February 2014 14:07