app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Saturday, 22 February 2014 14:14

பொள்ளாச்சியில் "சாதிக்கொரு சுடுகாடுமுறை" ஒழிப்பு விளக்கக் கூட்டங்கள் மற்றும் ஒழிப்பு போராட்டம்

*சாதிக்கொரு சுடுகாடுமுறை* ஒழிப்பு போராட்டம். சுடுகாட்டிலும் தீண்டாமை ! விளக்கக் கூட்டங்கள் 20-2-2014 மாலை வேட்டைகாரன்புதூர் மற்றும் ஆனைமலையில் நடைபெற்றது. இதில் கா.சு.நாகராசு மற்றும் வே.வெள்ளிங்கிரி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

 

மேலும் 22-2-2014 இன்று பொள்ளாச்சியில் கழகத்தின் சார்பில் சாதிக்கொரு சுடுகாடுமுறை ஒழிப்பு போராட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் தோழர் கு.இராமக்கிருட்டிணன் தலைமையில் 50 திற்கும் மேற்பட்டோர் கைதாகினர்.