app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Sunday, 23 February 2014 14:00

வெற்றி! காஞ்சியில் சாதிக்கொரு சுடுகாடுமுறை ஒழிப்பு போராட்டம் வெற்றி!

சுடுகாட்டிலும் சா தீ !

 

21-2-2014 காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் கழகத்தின் சார்பில் சாதிக்கொரு சுடுகாடுமுறை ஒழிப்பு போராட்டம் நடைபெற்றது.

 

காஞ்சியில் தலைவர் ஆனூர் ஜெகதீசன் ஐயா தலைமையில் 250 பேர் கைதாகினர். கோவையில் பொதுச்செயலாளர் தோழர் கு.இராமக்கிருட்டிணன் தலைமையில் 60 பேர் கைது. மதுரையில் 30, திருப்பூரில் 60, அன்னூரில் 30, திருச்சியில் 40, ஈரோட்டில் 20 என மொத்தம் 490 பேர் தமிழகம் முழுவதும் கைதாகினர்.

 

காஞ்சி மாவட்ட, சாதிக்கொரு சுடுகாடு பிரச்சனையில் உடனே வெற்றி!

 

கழகம் போராட்டம் நடத்துவதற்கு, கழக தலைவர் ஆனூர் செகதீசன், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை, காஞ்சி மாவட்ட தலைவர் இரா. பரந்தாமன், ஒருங்கிணைந்த டாக்டர் அம்பேத்கர் மன்ற மாவட்ட தலைவர் பரசுராமன், மன்ற மாவட்ட செயலாளர் பாண்டியன் மேலும் 250 பேருக்கும் மேல் கூடியவுடன் சுடுகாடு இருக்கும் சீக்கராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வி. மனோகரன், தி.மு.க மற்றும் அ.தி.மு.க வை சேர்ந்த கிளை செயலாளர் V.K செல்வமணி மற்றும் உறுப்பினர்கள் போராட்டம் நடத்துவதற்கு தயாராகும்போது, இந்த சுடுகாட்டில் சாதி வாரியாக தீண்டாமை பார்க்கவில்லை அப்படி நடந்தால் இனிமேல் இந்தசுடுகாட்டில் நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் என்று கழகத்தலைவர் ஆனூர் செகதீசன் அவர்களிடம் உறுதி கூறி சென்றுள்ளனர்.

 

மனிதன் உயிரோடு இருக்கும் போது சாதி பிரச்சனைகள், தீண்டாமைக் கொடுமைகள் நடந்து கொடு இருக்கும் போது மனிதன் இறந்த பின்னும் சுடுகாட்டிலும் தீண்டாமை! சாதிக்கொரு சுடுகாடு முறை ஒழிப்பு போராட்டம் 21.02.2014 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை அருகில் உள்ள குன்றத்தூரில் இருந்து பூந்தமல்லி செல்லும் பாதையில் சீக்கராயபுரம் சுடுகாட்டில் சாதிக்கொரு சுடுகாடு என்று ஒரே சுடுகாட்டில் நான்கு எரிமேடைகள் இருப்பதைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை, காஞ்சி மாவட்ட தலைவர் இரா. பரந்தாமன், ராசுகுமார், வட சென்னை மா.செ. சனார்தணன், இளைஞரணி அமைப்பாளர் பிரதாப், தென் சென்னை மாவட்ட செயலாளர் சா. குமரன், தி.செ. மாவட்ட தலைவர் சே. குமரன். இளைஞரணி அமைப்பாளர் சசிகுமார், இராயபேட்டை கோபி, இணைய பொறுப்பாளர் குருசரவணன் மற்றும் ஒருங்கிணைந்த டாக்டர் அம்பேத்கர் மன்றத் தலைவர் பாண்டியன், செயலாளர் பரசுராமன், முனியன், கோபி, திவ்யராசு, சீனு, சுரேந்தர், பாலு, ரமேசு மற்றும் திருநங்கைகள் திவ்யா, ஆர்த்தி, ரோசி, வைதேகி, கவிதா, ரோஜா மற்றும் ஊர் பொதுமக்கள் 250 பேருக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் திரளாகக்கலந்து கொண்டனர்.

 

மேலும் குன்றத்தூர் மா.து.செயலாளர் சிலம்பு சிவாஜி, செயலாளர் ப. பிரபு, மா.இ.அணி தலைவர் கரிகாலன், பரங்கிமலை ஒன்றிய தலைவர் ப.ராவணன், பரங்கிமலை ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி, அனகாபுத்தூர் நகரத் தலைவர் சித்தார்த்தன், நகர செயலாளர் து. முருகவேல், நகர மாணவரணி அமைப்பாளர் சி. அருண், ஆதாம் நகர் அமைப்பாளர் ராசு கமல், மா. பூபான், அம்பேத்கர் இராபட், சுதாகர், திருபெரும்புதூர் ஒன்றிய செயலாளர் து. கார்த்திகேயன், திருபெரும்புதூர் ஒன்றிய நகர செயலாளர் அசோக்குமார், பாடிச்சேரி கிளை செயலாளர் முரளி, வாலஜா ஒன்றிய செயலாளர் ராசிவ்காந்தி மற்றும் நூற்றுக்கணக்கான தோழர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Last modified on Sunday, 23 February 2014 16:52