app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 12 March 2014 13:01

கோவையில் 7 தமிழர் விடுதலைக்கான தெருமுனைப் பரப்புரை கூட்டம்!

7 தமிழர் விடுதலைக்கான தெருமுனைப் பரப்புரை கூட்டம் தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 04-03-2014 கோவை, வடவள்ளி பேருந்து நிலையம் முன் நடைபெற்றது. பொதுச்செயலாளர் தோழர் கு.ராமகிருட்டிணன், பொள்ளாச்சி மனோகரன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.

 

மேலும் 06-03-2014 மாலை கோவை சிவானந்தா காலனியில் தோழர் சாசுதீன் தலைமையில் தோழர்கள் ஜீவா, தண்டபாணி ஆகியோர் வரலாற்று நிகழ்வுகள் பற்றி சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள். பொதுச்செயலாளர் தோழர் கு.ராமகிருட்டிணன் அவர்கள் சிறப்புரையாற்றினார். பின்னர் தோழர் ரஞ்சித்பிரபு அவர்கள் நன்றி உரையாற்றினார்.