app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 12 March 2014 13:17

புதுச்சேரியில் காங்கிரசை சவப்பாடையில் ஏற்றும் போராட்டம்

புதுச்சேரியில் 2-03-2014 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி அளவில் புதுவை காமராஜர் சிலை (ராஜா தியேட்டர் ) அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக அப்பாவி தமிழர்கள் 7 பேரை தூக்கிலேற்றத் துடிக்கும் காங்கிரசை சவப்பாடையில் ஏற்றும் போராட்டம் நடைபெற்றது.

 

அதில் பச்சை ஓலையில் பாடை செய்து அதில் காங்கிரஸ் கட்சியின் கொடியையும் காங்கிரசின் கை சின்னைத்தையும் பாடையில் தூக்கி வந்து தோழர்கள் காங்கிரசின் தமிழர் விரோத செயல்களை கண்டித்து முழக்கமிட்ட படியே வந்து எரித்தனர்.

 

தோழர்களின் இந்த போராட்டத்தால் புதுச்சேரி காவல் துறைக்கும் தோழர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்ப்பட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

 

இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் 200 க்கும் மேற்ப்பட்டோரை காவல் துறை கைது செய்தது. இதில் 4 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

Last modified on Wednesday, 12 March 2014 13:31

Related Video