app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Monday, 31 March 2014 07:05

30.03.2014 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

30.03.2014 ஞாயிறு காலை 10 மணிக்கு சென்னை என்.எஸ்.சி போஸ் சாலை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிட கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 

1. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மதவாத பி.ஜே.பி-யையும் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் எதிர்ப்பது என்றும் வாக்காளார் என்ற முறையில் அவரவர் தொகுதிக்கு உட்பட்டு வாக்களிப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

 

2. பல ஆண்டுகளாக சென்னை உயார்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள், வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கீழமை நீதிமன்றங்களில் தமிழில் வாதாடவும், உத்தரவுகளை தமிழில் வெளியிடவும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதிட அரசிலமைப்புச் சட்டத்தில் ஒரு பிரிவினைக்காரணம் காட்டி மறுக்கப்பட்டுவருகிறது. வட இந்தியாவில் ஆங்கிலம் தெரிந்த பல வழக்கறிஞர்கள், நீதிபதிகள் இந்தியில் வாதிடவும், தீர்ப்புகளை இந்தியில் வெளியிடவும் செய்கின்றனார். தமிழில் மட்டுமல்லாமல் பிற மாநில மொழிகளில் வாதிட உயர்நீதிமன்றங்களில் தடைவிதிக்கப்படுகிறது. இந்நிலையை மாற்றுவதோடு தமிழில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடவும், தமிழக மக்களின் பல்லாண்டுக் கோரிக்கையான ‘மெட்ராஸ் உயார்நீதிமன்றம்” என்ற பெயரினை ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்” என்று மாற்ற உரிய சட்டத்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையினை அரசுக்கு வைப்பதோடு, வாதங்களைத் தமிழில் எடுத்தியம்ப வசதியாக சட்டப்புத்தகங்களைத் தமிழில் வெளியிட அரசு ஆவண செய்ய வேண்டுமாறு தந்தை பொரியார் திராவிடர் கழகம் கேட்டுக்கொள்கிறது.

 

3. தந்தை பெரியாரின் எழுத்துக்களாலும், பேச்சுகளாலும் எழுச்சிபெற்ற தமிழினம் அவரது ஓட்டுமொத்த பேச்சு, எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலைமை இன்றும் உள்ளது. இது வருத்தம் தரும் செய்தியாகும். சென்னை உயர்நீதிமன்றம் 2010-ஆம் ஆண்டே தந்தை பெரியாரின் எழுத்து மற்றும் பேச்சுகளை வெளியிட தடையில்லை என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியும் கூட இன்று வரை தந்தை பெரியாரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படாமல் உள்ளது. தமிழக அரசு இதில் தலையிட்டு தந்தை பெரியாரின் நூல்களை நாட்டுடமையாக்க ஆவணம் செய்யுமாறு தந்தை பெரியார் திராவிடர் கழகம் கேட்டுக்கொள்கிறது.

 

4. கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை மட்டுமல்லாமல் வழிபடுவோர்களின் உரிமை சம்பந்தமான ‘அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்” என்ற கோரிக்கை இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமலேயே உள்ளது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் வகையில் பழனி, திருச்செந்தூர், மயிலாப்பூர், திருவரங்கம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய கோவில்களில் அவார்களை பணி நியமனம் செய்திட வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.

 

5. சிதம்பரம் நடராஜார் கோவிலுக்குச் சொந்தமாகவுள்ள விலைநிலங்களை தீட்சிதர்கள் கையகப்படுத்திக் கொண்டு பார்ப்பனர் அல்லாத ஏழை உழவர்களுக்கு கூலிக்கூட சரியாக கொடுக்காமல் ட்டுமொத்த விளைச்சல்களையும் ஏகபோகமாக அனுபவித்து வருகிறார்கள். அதனை தடுத்து நிறுத்தும் வகையில் அரசு அந்நிலங்களை கையகப்படுத்தி நிலமற்ற ஏழை விவசாய்களுக்கு அளிக்க வேண்டும் என்று தந்தை பெரி யார் திராவிடர் கழகம் கேட்டுக்கொள்கிறது.

 

6. 1968-ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்கள் வைப்பதும், மதம் சம்பந்தமான விழாக்கள் நடத்தப்படுவதும் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. பின்பு இது சம்பந்தமாக 2004 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது அரசு அலுவலகங்களில் மதம் சம்பந்தமான கட்டிடங்கள் எதுவும் கட்டக் கூடாது என்று சுற்றறிக்கையும் விடப்பட்டது. ஆனாலும் இதனை சற்றும் மதிக்கமால் அரசு அலுவலகங்களில் இன்னமும் கடவளர் படங்களும், பூஜைகளும் சிறிது சிறிதாக கோயில்களும் எழுப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் மதச்சார்ப்பின்மைக்கு விரோதமானது ஆகும். மத்திய மாநில அரசுகள் இதில் தலையிட்டு மேற்படி அரசாணை மற்றும் சுற்றறிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்படத்தக்க வகையில் உறுதியான நடவடிக்கையினை எடுக்குமாறு தந்தை பெரியார் திராவிடர் கழகம் கேட்டுக்கொள்கிறது.

 

7. மக்களின் மூட நம்பிக்கைகளை பயன்படுத்தி ஏமாற்றும் செயலை ஒழித்திட மராட்டிய மாநிலத்தில் மூட நம்பிக்கை ‘ஒழிப்புச்சட்டம்” ஏற்றப்பட்டுள்ளதை போல தமிழ்நாட்டிலும் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தினை நிறைவேற்றி நடைமுறைப்படுத்தி அதன் மூலம் மக்களை மூட நம்பிக்கையால் பொருள் இழப்பு, சிந்தனை இழப்பு ஆகியவற்றில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று தமிழக அரசை தந்தை பொரியார் திராவிடர் கழகம் வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.

 

8. அறிவாசன் தந்தை பெரியார் பல ஆண்டுகள் திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு பகுத்தறிவு பிரச்சாரம் மேற்கொண்டார் என்பதும், தம் வாழ்வின் பெரும் பகுதியைத் திருச்சியிலேயே கழித்தார் என்பதும் அனைவரும் அறிந்த செய்தியாகும். எனவே தந்தை பெரியாரின் பெயரை திருச்சி விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்று மத்திய அரசை தந்தை பெரியார் திராவிடர் கழகம் வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.

 

9. சிங்களர்களால் உடைமைகளை இழந்து அகதிகளாக வந்துள்ள ஈழத்தமிழர்களை ‘சிறப்பு அகதிகள் முகாம் என்ற சித்தரவதை கூடத்தில் அடைத்து வைக்கும் கொடுமை இன்றும் மாறவில்லை. இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். மேற்படி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள், தங்களை சிறப்பு முகாம்களில் இருந்து திறந்தவெளி முகாம்களுக்கு மாற்றகோரி உண்ணாவிரதம் இருப்பதும், போராட்டம் நடத்துவதும் இன்றும் தொடர்கிறது. மேற்படி சிறப்பு முகாம் என்ற சித்ரவதை கூடத்திலிருந்து ஈழத்தமிழர்களை திறந்தவெளி முகாமிற்கு மாற்றம் செய்யப்பட வேண்டுமென்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.

 

10. சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர்சாதி பார்ப்பன நீதிபதிகள் தற்போது அவர்களது விகிதாசாரமான 2 சதவிகிதத்திற்கு அதிகமான வகையில் 7 பேர் உள்ளனர். இனிவரும் காலங்களில் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படும் பொழுது பார்ப்பனர் அல்லாத நீதிபதிகளையே நியமிக்க வேண்டும் என்றும், பார்ப்பன நீதிபதிகள் 2 சதவிகிதம் ஆகும் வரை அவர்களை நியமிக்ககூடாது என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் வற்புறுத்துகிறது.

 

11. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள்பற்றி சர்வதேச விசாரணைக்கு இலங்கையை உட்படுத்த அமெரிக்கா ஐ.நா.வில் நிறைவேற்றிய தீர்மானத்தை இந்தியா எதிர்த்ததை கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

 

தலைவர் துணை தலைவர் பொதுச்செயலாளார்

Last modified on Thursday, 03 April 2014 14:34