app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Tuesday, 15 April 2014 12:52

தமிழகம் முழுவதும் அண்ணல் அம்பேத்கரின் 124 ஆவது பிறந்த நாள் விழா

கோத்தகிரி :

 

14-4-2014 தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கரின் 124 ஆவது பிறந்த நாள் விழா கோத்தகிரி காமராசர் சதுக்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் கி.பரத் தலைமை தாங்கினார். அண்ணல் அம்பேத்கரின் உருவ படத்திற்கு மார்க்சிச அறிஞர் எஸ்.வி.ராசதுரை அவர்கள் மாலை அணிவித்தார். விழாவில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் மன்னரசு, நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பில் பாலன் அவர்கள், மற்றும் கழக தோழர்கள் ஜோசப், ஜெய் குமார், கௌசல்யா மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

புதுவை:

 

புதுச்சேரியில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி சாதி மத மூடக் கொள்கைகளை ஒழித்திட இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று அரியாங்குப்பம் அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு புதுச்சேரி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்தி முழக்கமிட்டனர். அதன்பின் உப்பளம் தொகுதி துறைமுக நுழைவு பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்தி முழக்கமிட்டனர். வீரமோகன் புதுச்சேரி கழக தலைவர், ம. இளங்கோ துணைத்தலைவர், செ. சுரேஷ் செயலாளர் ,வீர, இராஜேந்திரன் காப்பாளர், சி. சிவமுருகன், இளைஞரணித்தலைவர், இரா.பெருமாள் தொகுதிதலைவர், ந.இரவி, ஜெகன், குமார், ராஜ்குமார், பாஸ்கரன்,தேஜா, இராஜசேகர், குமார், பன்னிர்செல்வம், இராஜ்,முருகன்,காளிதாஸ், மற்றும் ஐம்பதிற்கும் மேற்பட்ட கழக தோழர்கள் பங்கேற்றனர்.

 

கோவை :

 

கோவையில் அண்ணல் அம்பேத்கருக்கு  மாலைகள் அணிவித்தனர்! பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், மற்றும் வெ.ஆறுச்சாமி, சாஜித், ரஞ்சித்பிரபு, தண்டபாணி, கோபால், ஆறுமுகம், ஆனந்த், பிரபாகரன் மற்றும் தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

மேலும் சென்னை, ஈரோடு, சேலம் என தமிழகம் முழுவதும் அண்ணல் அம்பேத்கரின் 124 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Last modified on Wednesday, 16 April 2014 11:50