app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Saturday, 19 April 2014 12:56

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 123வது பிறந்தநாள் விழா!

காஞ்சி மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகமும், டாக்டர் அம்பேத்கர் மன்றமும் இணைந்து, டாக்டர் அம்பேத்கர் மன்ற ஒருங்கிணைப்பாளர் இல. பாண்டியராஜன் தலைமையிலும், காஞ்சி மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் இரா. பரந்தாமன் முன்னிலையிலும் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 123வது பிறந்தநாள் விழா! சிறப்பாக கொண்டாடப்பட்டது.


இந்த விழாவில் தந்தை பெரியார் திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை, டாக்டர் அம்பேத்கரின் பெருந்தொண்டரும் பௌத்த நெறியாளருமான வி. போதி தேவாரம் அவர்கள், டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் மூத்த தோழர் கோவூர் கணேசன் அவர்கள் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழக தென் சென்னை மாவட்ட செயலாளர் ச. குமரன் அவர்கலும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

1. காலை 9.00 மணிக்கு பம்மல் ஆதம்நகர் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு தோழர் கரு. அண்ணாமலை தலைமையில், தோழர் இல. பாண்டியராஜன் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.

2. அனகபுதூர் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு தோழர் மாதவன் அவர்கள் மாலை அணிவித்து சிறப்பு செய்தார். டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பல அரசியல் கட்சிகள் வந்திருந்தபோது, டாக்டர் அம்பேத்கரின் பெருந்தொண்டரும் பௌத்த நெறியாளருமான வி. போதி தேவாரம் அவர்கள் கடவுள் மறுப்பு உறுதிமொழி கூற, தோழர் திவ்யராஜ் தலைமையில் 300க்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக மற்றும் டாக்டர் அம்பேத்கர் மன்ற தோழர்களும் கடவுள் மறுப்பு உறுதிமொழியை எடுத்துகொண்டார்கள்.

3. காஞ்சி மாவட்ட இளைஞரணி தலைவர் தோழர் இராவணன் வீட்டு முன்னால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கரின் படத்திற்கு சிலம்பம் சிவாஜி தலைமையில் தோழர்கள் கோ. கரிகாலன், பாலசுப்ரமணியம், அனகை முருகவேல் மற்றும் சித்தார்த்தன் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.

4. கரைமாநகர் மேட்டு தெருவில் அமைக்கப்பட்ட மன்றத்தின் புதிய கொடியினை அ.சுதாகர் அவர்களின் தலைமையில் மகளிர் அணி பொறுப்பாளர் தி.தீபிகா அவர்கள் ஏற்றிவைத்தார்.

5. கரைமாநகர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு பெருந்திரளான தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்களும் மற்றும் டாக்டர் அம்பேத்கர் மன்ற தோழர்களும் பறை இசை முழக்கங்களுடன் .பெ.தி.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா. பிரதாப் முன்னிலையிலும் கோவூர் கணேசன் அவர்கள் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.

6. குன்றத்தூர் தெற்கு பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்திற்கு தோழர்கள் சங்கர், மதன்ராஜ், உதயா முன்னிலையில் தோழர் பாலு அவர்கள் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.

7. குன்றத்தூர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு சிலம்பம் சிவாஜி, இராவணன் மற்றும் சி. அருண் முன்னிலையில் தோழர் சித்தார்த்தன் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.

8. கொல்லசேரி பகுதியில் வைக்கபட்டிருந்த டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு .பெ.தி.க தென்சென்னை மாவட்ட செயலாளர் கோ. தீபக் அவர்கள் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பித்தார். மன்ற கொடியினை இல. பாண்டியராஜன் முன்னிலையில் தோழர் கரு. அண்ணாமலை ஏற்றிவைத்தார்.

9. கொல்லசேரி ஒத்தவாடை பகுதியில் வரவேற்பு செய்து டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு காஞ்சி மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் இரா. பரந்தாமன் சிறப்பு செய்தார்.

10. சிவந்தாங்கள் பகுதியில் தோழர் கோபி, ராஜேஷ்,அவர்களின் தலைமையில் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு தோழர் சசிகுமார் அவர்கள் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்கள். பட்டாசு வெடித்தும், இனிப்புவழங்கியும் மகிழ்ச்சியுடன் புரட்சியாளர் பிறந்தநாளை தோழர்கள் அனைவரும் கொண்டாடினார்கள்.

11. சிவந்தங்கள் பாபு கார்டன் பகுதியில் திருநங்கைகள் பாதுகப்புகழகம் மற்றும்  மகளிர் மன்றம் பெயர் பலகையை .பெ.தி.க வடக்குமண்டல அமைப்பாளர் கரு .அண்ணாமலை அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார்கள். தோழர்கள் வி. போதி தேவாரம், கோவூர் கணேசன், இரா. பரந்தாமன் மற்றும் ச. குமரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

12. சிவந்தங்கள் பாபு  கார்டன் பகுதியில் அமைந்துள்ள மன்றகொடியினை தோழர் மனோகர், வினோபா, மதன், மணி, ராஜ் ஆகியோர் முன்னிலையில் தோழர் திவ்யராஜ் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தந்தை பெரியார் திராவிடர் கழக தென் சென்னை மாவட்ட செயலாளர் ச. குமரன் சிறப்புரையாற்றினார்கள்.

மதியம் 2.00 மணியளவில் புத்தர் திருத்தலத்தில் 300க்கும் மேற்ப்பட்ட தோழர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் மன்ற ஒருங்கிணைப்பாளர் இல. பாண்டியராஜன் அவர்கள் சிறப்பான மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்.

இதுவரை காஞ்சி மாவட்டத்தில் தனியாக செயல்பட்டுவந்த டாக்டர் அம்பேத்கர் மன்றம், தந்தை பெரியார் திராவிடர் கழக சார்பு மன்றமாக இந்த பிறந்தநாள் விழா! முதல் இணைக்கப்பட்டுள்ளது.


இப்படிக்கு,
கரு. அண்ணாமலை தந்தை பெரியார் திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப்பாளர்