app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Saturday, 19 April 2014 13:47

நிரபராதி 26 தமிழர்களின் உயிர்காப்பு வழக்கு நிதி!

மத்திய மாநில அரசுகளின் காவல்துறையின் கடுமையான அடக்குமுறையையும் மீறி மரண தண்டனைக்கு எதிராக முதன் முதலில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம்.

இராசீவ்காந்தி கொலையாளிகள் என்று தமிழகத்தில் பெரும்பாலோர் புறக்கணித்த சமயத்தில், அப்பாவி தமிழர்கள் என்று அவர்களுக்காக வழக்கை நடத்துவதற்கும் யாருமே முன்வராத அன்றைய தினம், நிரபராதி ஈழ தமிழர்கள் 13 பேர்களுக்கும், நிரபராதி தமிழ்நாட்டு தமிழர்கள் 13 பேர்களுக்கும் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டபோது, இந்த 26 பேர்களின் விடுதலைக்காக வழக்கை நடத்துவதற்கு தந்தை பெரியார் திராவிடர்கழகமும் அதன் தோழர்களும் மிகவும் சிரமப்பட்டு முதல் தவணையாக 12.05.1998 அன்று ரூபாய் ஒரு இலட்சம் வழக்கு நிதியாக எம்.ஜி.ஆர் நகரிலும்;

இரண்டாவது தவணை சென்னை இராயபேட்டையில் கலை முதல் மாலை வரை பெரியார் திராவிடர் கழகத்தின் கடுமையான உழைப்பினால் மரணதண்டனை எதிர்ப்பு மாநாடு நடத்தி 29.08.1998 அன்று ரூபாய் ஒரு இலட்சம் 26 தமிழர்களின் உயிர் காப்பு வழக்கு நிதியை, நிரபராதி 26 தமிழர்களின் உயிர் மீட்புக்குழு தலைவரான பழ.நெடுமாறன், அன்றைய மரணதண்டனைக்கு எதிரான ஸ்டார் பேச்சாளர் பேரா. சுபவீரபாண்டியன், கழக தலைவர் ஆனூர் ஜெகதீசன், வழக்கை நடத்துவதற்கு முன்வந்த வழக்குரைஞர் எஸ்.துரைசாமி மற்றும் விடுதலை இராசேந்திரன் ஆகியோரிடம் இரண்டு இலட்ச ரூபாயும் வழங்கப்பட்டது.
இவர்களின் விடுதலைக்கு கடுமையாக பாடுபட்ட அனைவருமே தந்தை பெரியாரின் தொண்டர்கள்.

- தந்தை பெரியார் திராவிடர் கழகம்! சென்னை.


இப்படிக்கு,
கரு. அண்ணாமலை தந்தை பெரியார் திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப்பாளர்