app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Tuesday, 13 May 2014 14:59

சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்! 14-05-2014 புதன் கிழமை, காலை 10.00 மணி

சென்னை மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக,
தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையிலும், தா.பெ.தி.கழக சட்டத்துறை செயலாளர் வை. இளங்கோவன் முன்னிலையிலும் சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்! 14-05-2014 புதன் கிழமை, காலை 10.00 மணியளவில் நடைபெறும். கழக தோழர்களும், தமிழ் இன உணர்வாளர்களும் போராட வாரீர்! வாரீர்!!

1. ஈழத்தமிழர்கள் 30 ஆண்டு காலம் அறவழி போராட்டத்தாலும், 30 ஆண்டு காலம் ஆயுத போராட்டத்தாலும் போராடிவந்த தமிழர்கள் 2009 - ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி போர் முடிவுக்கு வந்த பிறகு ஈழத்தமிழர்கள் உலகளவில் பல நாடுகளுக்கு சென்று அங்கு அகதிகளாக வாழ்ந்துகொண்டு, அந்தந்த நாட்டு அரசியல் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் மூலம் சானல் 4 தொலைகாட்சி மூலம் அறவழியில் உலக அரங்கிற்கு வெளிக்கொண்டு வருவதை தடுக்கும் நோக்கத்துடன், உலகமெங்கும் இருக்கும் 16 தமிழ் அமைப்புகளை இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளதை கண்டித்தும்.

2. இதுவரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வரும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளை மண்டபம் முகாமில் தங்கவைத்து ஒரு சில மாதங்கள் தமிழ்நாட்டில் அவர்கள் விரும்பும் எந்தஒரு பகுதிலும் வசிப்பதற்கு அனுமதி கொடுத்த அரசாங்கம், சென்ற வாரம் இலங்கையிலிருந்து வந்த குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 10 அகதிகளை மண்டபம் முகாமில் வைத்து விசாரித்துவிட்டு சென்னையில் உள்ள புழல் சிறையில் அடித்ததை கண்டித்தும்.

3. பல ஆண்டுகள் இலங்கையில் போர் நடந்த காரணமாக இந்தியாவில் குடியேறிய ஈழத்தமிழர்கள் தமிழக காவல்துறையில் பதிவு செய்தும் பதிவு செய்யாமலும் தமிழ் நாட்டில் தங்கியுள்ளார்கள். போர் முடிவுக்குப்பின் ஈழத்தில் தமிழர்கள் பகுதியில் சிங்களர்கள் அதிகமாக குடியமர்த்தப் படுகிறார்கள். இதனை அறிந்த பதிவு செய்யாத இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல விண்ணப்பித்தால் தலா ஒருவருக்கு 1 ஆண்டுக்கு ரூ. 300/- மட்டும் அபராதம் கட்டினால் இலங்கைக்கு செல்லலாம் என்று சென்ற ஆண்டு வரை இருந்தது.
ஆனால் இந்த ஆண்டுமுதல் இந்த அபராத தொகையானது 1 நபருக்கு 1 ஆண்டுக்கு ரூ. 5000/- வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது மறைமுகமாக இலங்கை தமிழர் பகுதிகளை சிங்களர்கள் நிரந்தரமாக ஆக்கிரமிப்பு செய்வதற்காக இந்தியா மறைமுகமாக உதவி செய்யும் செயலாகும். இந்த அபராத கட்டணத்தை இந்திய அரசாங்கம் உடனடியாக திரும்பப்பெறவேண்டும் என்பதை வலியுறுத்தியும்.

4. இலங்கையில் இருந்து போரினால் பாதிக்கப்பட்டு காயப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காகவோ, கல்வி கற்பதர்க்காகவோ ஈழத்தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு வந்தால் சில நேரங்களில் சிகிச்சைக்காக கூடுதல் நாட்கள் (Over Stay) தங்க நேரிடுகிறது. அந்த சமயத்தில் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டாலோ அல்லது விசா நீட்டிப்பதர்க்கோ இலங்கை தமிழர்கள் குடியுரிமை அதிகாரிகளை அணுகினால் அவர்களை அலைக்கழித்து காலதாமதம் செய்கிறார்கள். தேவையில்லாத கடிதங்களை கேட்கிறார்கள், க்யூ பிரிவு காவல் அதிகாரிகள் பாஸ்போர்ட் கொடுக்கச் சொல்லியும், பாஸ்போர்ட் கொடுக்காமல் காலதாமதம் செய்யும் குடியுரிமை அதிகாரிகளைக் கண்டித்தும்.

சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்! 14-05-2014 புதன் கிழமை, காலை 10.00 மணியளவில் நடைபெறும். கழக தோழர்களும், தமிழ் இன உணர்வாளர்களும் போராட வாரீர்! வாரீர்!!

- சென்னை மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம்
94440 11124
98417 09129
90032 26947

இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள 16 அமைப்புகளின் விபரம்:

1 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு
2 தமிழ் புனருத்தாபன அமைப்பு (ரீ.ஆர்.ஓ)
3 தமிழ் ஒருங்கிணைப்பு குழு (ரீ.ஸீ.ஸீ)
4 உலக தமிழ் அமைப்பு
5 கனேடிய தமிழ் காங்கிரஸ்
6 அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்
7 உலகளாவிய தமிழ் சம்மேளனம்
8 கனேடிய தமிழ் தேசிய கவுன்சில் (மக்கள் அவை)
9 தமிழ் தேசிய கவுன்சில்
10 தமிழ் இளைஞர் அமைப்பு
11 உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழு
12 “ஈழத்தில் அரசாங்கம்” கற்பனையில் உள்ள அமைப்பு
13 தமிழீழ மக்கள் கூட்டம்
14 உலக தமிழ் உதவி நிதியம்
15 தலைமை அமைப்பு
16 பிரித்தானிய தமிழ் மாநாடு

ஆங்கிலத்தில்,
01. Liberation Tigers of Tamil Eelam a.k.a LTTE a.k.a Tamil Tigers.

02. Tamil Rehabilitation Organization a.k.a TRO.

03. Tamil Coordinating Committee a.k.a TCC

04. British Tamil Forum a.k.a BTF

05. World Tamil Movement a.k.a WTM

06. Canadian Tamil Congress a.k.a CTC

07. Australian Tamil Congress a.k.a ATC

08. Global Tamil Forum a.k.a GTF

09. National Council Of Canadian Tamils a.k.a NCCT a.k.a Makkal Avai

10. Tamil National Council a.k.a TNC

11.Tamil Youth Organization a.k.a TYO

12. World Tamil Coordinating Committee a.k.a WTCC.

13. Transnational Government Of Tamil Eelam a.k.a TGTE

14. Tamil Eelam Peoples Assembly a.k.a TEPA

15 .World Tamil Relief Fund a.k.a WTRF

16. Headquarters Group a.k.a HQ Group

இப்படிக்கு,

கரு. அண்ணாமலை தந்தை பெரியார் திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப்பாளர்
Last modified on Tuesday, 27 May 2014 16:56