app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 14 May 2014 13:21

கோவை செஞ்சிலுவை சங்கம் முன் மாபெரும் கண்டன "ஆர்ப்பாட்டம்"

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ள 16 (பதினாறு) தமிழ் அமைப்புகளை ராஜபக்சே இலங்கையில் தடை செய்ததை ஆதரிக்கும் விதமாக அந்த அமைப்புகளை இந்தியாவிலும் தடை செய்துள்ள "இந்திய" அரசை கண்டித்து இன்று (மே 14 புதன் காலை 10 மணிக்கு) கோவையில் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் செஞ்சிலுவை சங்கம் முன் மாபெரும் கண்டன "ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மாநகர தலைவர் வே.கோபால், செயலாளர் இ.மு.சாஜித், பொருளாளர் இரா.இரஞ்சித் பிரபு, வடக்கு மாவட்ட தலைவர் கலங்கல் மு.வேலுசாமி, பொருளாளர் அகில் குமரவேல், தெற்கு மாவட்ட செயலாளர் த.சந்திரசேகர், அலுவலக பொறுப்பாளர் உ.பிரபாகரன், தமிழரசன், தமிழ் மகாலி, பா.ம.ஆறுமுகம், அர.ராசன், ஈசுவரன், இல.செல்வம், ஆனந்த், உக்கடம் சிவாஜி, செந்தில், பத்ரன், உமேஸ், செபாஸ்தியன், கிருட்டிணமுர்த்தி, இளங்கோ, அன்னூர் நா.கி.சோதிராம், ராமன், வசந்த குமார், ஆட்டோ தேவா, தங்கதுரை, வினோத், மகளிர் அணி கா.சு.லலிதா, அசீனா, பாரதி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்தில் இந்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
- தந்தை பெரியார் திராவிடர் கழகம், கோவை.

 

Last modified on Tuesday, 27 May 2014 17:22