app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 14 May 2014 13:33

சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம் 14-05-2014

14-05-2014 காலை முதல் பலத்த போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தது நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவன். 10 மணியளவில் தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்களும், மக்கள் நீதி இயக்க தோழர்களும், நூற்றுக்கும் மேல் குவிந்தனர்.

 

சில காரணத்தினால் ஆனூர் செகதீசன் அவர்கள் மருத்துவமனை சென்றிருந்ததால் போராட்டத்தில் கலந்துகொள்ள இயளவில்லை.

 

முற்றுகைப் போராட்டம் த.பெ.தி.க. வடக்கு மண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தில் தென்சென்னை மாவட்ட செயலாளர் ச. குமரன், காஞ்சி மாவட்ட தலைவர் இரா. பரந்தாமன் மற்றும் மக்கள் நீதி இயக்கத்தின் அமைப்பாளார் இல. பாண்டியராசன், விமல், தினேசு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

 

68 பேர்களை காவல்துறையினர் கைது செய்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அருகில் உள்ள APVP திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தார்கள்.

 

தோழர் வடசென்னை பாசுகர் மற்றும் இரவிச்சந்திரன் அனைவருக்கும் உணவு மற்றும் தின்பண்டங்கள் வாங்கிவந்து காவல் நிலையத்தில் பார்த்தனர்.

 

மாலை 3 மணியளவில் த.பெ.தி.க. சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் வை. இளங்கோவன் மற்றும் வழக்கறிஞர் ராஜவேலாயுதம் வந்திருந்து தோழர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்கள்.

 

மாலை 6.30 மணியளவில் காவல்துறையினர் அனைவரையும் விடுதலை செய்தனர். கழகத்தின் போராட்டம் பற்றிய செய்தி தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களில் இடம்பெற்றது.

 

இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள 16 அமைப்புகளின் விபரம்:

1 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு
2 தமிழ் புனருத்தாபன அமைப்பு (ரீ.ஆர்.ஓ)
3 தமிழ் ஒருங்கிணைப்பு குழு (ரீ.ஸீ.ஸீ)
4 உலக தமிழ் அமைப்பு
5 கனேடிய தமிழ் காங்கிரஸ்
6 அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்
7 உலகளாவிய தமிழ் சம்மேளனம்
8 கனேடிய தமிழ் தேசிய கவுன்சில் (மக்கள் அவை)
9 தமிழ் தேசிய கவுன்சில்
10 தமிழ் இளைஞர் அமைப்பு
11 உலக தமிழ் ஒருங்கிணைப்புக் குழு
12 “ஈழத்தில் அரசாங்கம்” கற்பனையில் உள்ள அமைப்பு
13 தமிழீழ மக்கள் கூட்டம்
14 உலக தமிழ் உதவி நிதியம்
15 தலைமை அமைப்பு
16 பிரித்தானிய தமிழ் மாநாடு

ஆங்கிலத்தில்,
01. Liberation Tigers of Tamil Eelam a.k.a LTTE a.k.a Tamil Tigers.

02. Tamil Rehabilitation Organization a.k.a TRO.

03. Tamil Coordinating Committee a.k.a TCC

04. British Tamil Forum a.k.a BTF

05. World Tamil Movement a.k.a WTM

06. Canadian Tamil Congress a.k.a CTC

07. Australian Tamil Congress a.k.a ATC

08. Global Tamil Forum a.k.a GTF

09. National Council Of Canadian Tamils a.k.a NCCT a.k.a Makkal Avai

10. Tamil National Council a.k.a TNC

11.Tamil Youth Organization a.k.a TYO

12. World Tamil Coordinating Committee a.k.a WTCC.

13. Transnational Government Of Tamil Eelam a.k.a TGTE

14. Tamil Eelam Peoples Assembly a.k.a TEPA

15 .World Tamil Relief Fund a.k.a WTRF

16. Headquarters Group a.k.a HQ Group

Last modified on Tuesday, 27 May 2014 17:42