app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 02 July 2014 14:41

கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க வலியுறுத்தி கோவையில் தந்தை பெரியார் தி.க சார்பில் நூதன போராட்டம்

இந்தியாவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க வலியுறுத்தி கோவையில் தந்தை பெரியார் தி.க சார்பில் நூதன போராட்டம் நடந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், இந்தியாவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க வலியுறுத்தி ‘கால்பந்து காவடி ஆர்ப்பாட்டம்‘ கோவை செஞ்சிலுவை சங்க அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்றவர்கள், சர்வதேச முன்னணி கால்பந்து வீரர்களைப்போல் முகமூடி மற்றும் சீருடை அணிந்து, தலையில் கால்பந்து வைத்துக்கொண்டு கரகம் ஆடியபடி கோஷம் எழுப்பினர். சிலர், காலால் உதைத்தும், தலையில் முட்டியும் கால்பந்து விளையாடிக்கொண்டே கோஷம்போட்டனர். வழக்கமான போராட்டத்தைவிட, இது வித்தியாசமானதாக இருந்தது. பார்வையாளர்களை கவர்ந்தது.

இப்போராட்டத்தில், ஆட்சிமன்ற குழு உறுப்பினர் ஆறுச்சாமி, வடக்கு மாவட்ட தலைவர் ராமசாமி, மாநகர தலைவர் கோபால், நிர்வாகிகள் கலங்கல் வேலு, சாஜித், ரஞ்சித்பிரபு, மணிகண்டன், ஜீவா, இளங்கோ, தமிழரசன், வினோத்குமார், மணிமாறன், ஜெபஸ்டின் உள்பட பலர் பங்கேற்றனர். இதுபற்றி கு.ராமகிருட்டிணன் கூறுகையில், ‘‘நம்மைவிட மக்கள் தொகையில் மிகவும் குறைவாக உள்ள குட்டி நாடுகள் எல்லாம் சர்வதேச கால்பந்து விளையாட்டில் சாதனை படைக்கின்றன. ஆனால், நமது நாட்டில் அந்நிய விளையாட்டான கிரிக்கெட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. தேசிய விளையாட்டு ஹாக்கி புறக்கணிக்கப்படுகிறது. தாய்மண்ணின் விளையாட்டுகளான கபடி, கால்பந்து, கூடைப்பந்து போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும். தமிழக அரசு சார்பில் கிராமங்கள்தோறும் பொங்கல் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. ஆனால், இடையில் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அதையும் மீண்டும் நடத்தவேண்டும்‘‘ என்றார்.

Last modified on Friday, 04 July 2014 10:11