app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Thursday, 10 July 2014 10:02

சென்னை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்

ஒன்றுபட்ட சென்னை மாவட்ட புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்:

சென்னை மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக

தலைவராக திருவெற்றியூர் து. இரவிச்சந்திரன் அவர்களும்,

செயலாளராக, இராயப்பேட்டை டிங்கர் ச. குமரன் அவர்களும்,
பொருளாளராக, கொளத்தூர் கே. திலீபன் அவர்களும்,
அமைப்பாளராக, ராமாபுரம் க. சுப்பிரமணி அவர்களும்,
மகளிரணி அமைப்பாளராக, சைதை கிரேசி விஜயகுமார் அவர்களும்,
துணைத் தலைவராக, திருவல்லிக்கேணி இ. கோபி அவர்களும்,
துணைத் தலைவராக, புரசை சி. பாஸ்கர் அவர்களும்,
துணைச் செயலாளராக, அம்பத்தூர் பா. நாகராசன் அவர்களும்,
துணைச் செயலாளராக, எம்.ஜி.ஆர்.நகர். மு. வெங்கடேசன் அவர்களும்,
இளைஞரணி தலைவராக, மயிலை மா. சசிக்குமார் அவர்களும்,
இளைஞரணி செயலாளராக, இராயப்பேட்டை, ந. அப்பு அவர்களும்,
இளைஞரணி அமைப்பாளராக, கொளத்தூர், கி. அருள் அவர்களும்,

சென்னை மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக இணையதள பொறுப்பாளர்கள்:

மாசிலா. விநாயகமூர்த்தி (இணைய வழி பிரச்சாராம், செய்தி தயாரிப்பு மற்றும் கணினி பயிற்சியாளர்)
சோ. மதிவாணன் ( செய்தி தயாரிப்பு, பல்லூடக வடிவமைப்பு மற்றும் கணினி பயிற்சியாளர் )
குரு. சரவணன் ( கணினி பயிற்சியாளர்)
வி. பொற்கோவன்

தந்தை பெரியார் திராவிடர் கழக துணைத் தலைவர், வழக்கறிஞர் செ.துரைசாமி அவர்கள் தோழர்களுக்கு கணினி பயிற்சி அளிப்பதற்காக ஒரு மடிக்கணினியும் மற்றும் கழக நிகழ்ச்சிகளை புகைப்படம் எடுப்பதற்காக புகைப்படக்கருவி (கேமரா) ஒன்றும் வாங்குவதற்காக 6.7.2014 அன்று நடைபெற்ற மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் ரூபாய் 50,000/- வழங்கினார், நன்றியுடன் பெற்றுக்கொண்டு கணினி பயிற்சிக்கான முயற்ச்சியை தொடங்கியுள்ளனர் கழக கணினி பயிற்சியாளர்கள்.

கணினி பயிற்சி வாரத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும். கழக தோழர்கள், கழக ஆதரவாளர்கள் கணினி பயிற்சி பெற விரும்பும் தோழர்கள் கீழ்காணும் எண்களில் தொடர்புக்கொண்டு பதிவு செய்துக்கொள்ளவும்.

மாசிலா. விநாயகமூர்த்தி : 97102 26405
சோ. மதிவாணன் : 94442 37991
குரு. சரவணன் : 99410 18868


மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் கலந்துகொண்டார்கள். அரங்கு நிறைந்ததால் 25க்கும் மேற்பட்ட தோழர்கள் வெளியில் அமர்ந்து இருந்தனர்.

மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. புதுச்சேரியில் நடக்கவிருக்கும் கழக மாநாட்டிற்கு திரளாக செல்லுதல்.

2. இணையதளத்தில் பெரியார் கருத்துக்களை தொடர்ந்து பரப்பவும், பெரியாரியலுக்கு எதிராக பரப்பப்படும் செய்திகளுக்கு சரியான பதிலடி கொடுக்கும் முகமாக, கழகத் தோழர்களுக்கு கணினி பயிற்சி அளிப்பதர்க்காக கழக துணைத் தலைவர், வழக்கறிஞர் செ. துரைமி அவர்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை, கழக தோழர்களுக்கு இணையதள பொறுப்பாளர்கள் பயிற்சி அளித்தல்.

3. " வஞ்சிக்கப்படும் தமிழகம்" என்ற தலைப்பில் தொடர்ந்து தெருமுனைக் கூட்டங்கள் நடத்துதல்.

4. மாதம் இருமுறை கழக தோழர்களுக்கு பயிற்சிக் கூட்டங்கள் நடத்துதல்.

ஆகிய மேற்படித் தீர்மானங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இயற்றப்பட்டன.