app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Tuesday, 15 July 2014 09:17

பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன் அவர்களுக்கு "சமூக நீதி போராளி" விருது

நேற்று 14-07-2014 மாலை கோவை அண்ணாமலை அரங்கில் தமிழர் விடுதலை இயக்கம் சார்பாக தோழர் வெண்மணி அவர்களின் ஒருங்கிணைப்பில் 

1.நந்தன் எனும் ரகுநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு வீரவணக்க நிகழ்ச்சி ! 

2.மரியாதைக்குரிய எழில் இளங்கோவன் அவர்கள் எழுதிய, " பவுத்தம் ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம் " எனும் புத்தக அறிமுக நிகழ்வு !

நடைபெற்றது.

அறிமுக உரை : புலவர் செந்தலை நா. கவுதமன் அவர்கள் !

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர், கோவை கு.ராமகிருட்டிணன் அவர்களுக்கு, 1800 சாதி மறுப்புத் திருமணங்கள் நடத்தி வைத்ததற்காக, "சமூக நீதிப் போராளி" எனும் விருது, வழங்கினார்கள் !

விருது வழங்கியவர் : தோழர் P. R . நடராஜன் அவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் !

Last modified on Tuesday, 15 July 2014 09:29