app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Sunday, 27 July 2014 13:49

திருவள்ளூர் மாவட்டம், உளுந்தை கிராமத்தில் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்க கொடியையும், தந்தை பெரியார் திராவிடர் கழக கொடியையும் நான்கு இடங்களில் ஏற்றப்பட்டது

திருவள்ளூர் மாவட்டம், உளுந்தை கிராமத்தில் 20-07-2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 6-00 மணிக்கு, அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் சார்பாக அம்பேத்கர் மக்கள் நீதி இயக்க கொடியையும் தந்தை பெரியார் திராவிடர் கழக கொடியையும் நான்கு இடங்களில் ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு,

தலைமை: D. ரமேஷ்

வரவேற்புரை: து. மனோஜ்குமார்

முன்னிலை: து. கார்த்திகேயன் - த.பெ.தி.க. ஒன்றிய தலைவர்

மேலும்

அம்பேத்கர் மக்கள் நீதி இயக்க கொடியை இல. பாண்டியராஜன் ஒரு இடத்திலும், செ. விமல்ராஜ் ஒரு இடத்திலும் ஏற்றிவைத்தனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழக கொடியை வடக்கு மண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை அவர்கள் ஒரு இடத்திலும், தென் சென்னை மாவட்ட செயலாளர் ச. குமரன் அவர்கள் மற்றொரு இடத்திலும் ஏற்றிவைத்து பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

சென்ற மாதம் த.பெ.தி.க கொடி வெட்டி சாய்க்கப்பட்ட இடத்திலேயே இரண்டு த.பெ.தி.க கொடியும், இரண்டு அம்பேத்கர் மக்கள் நீதி இயக்க கொடியும் ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளை காஞ்சி மாவட்ட த.பெ.தி.க தலைவர் இரா. பரந்தாமன் அவர்களும் மற்றும் திருவள்ளூர் மாவட்ட த.பெ.தி.க அமைப்பாளர் து. சுகேந்திரன் அவர்களும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

இரவு பொதுக்கூட்டத்தில் கரு. அண்ணாமலை, ச. குமரன், இரா. பரந்தாமன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட B.S.P துணை அமைப்பாளர் M. பிரேம் ஆகியோர் நகைச்சுவையாகவும், சிந்திக்கும்படியும் சிறப்புரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் த.பெ.தி.க இளைஞரணி அமைப்பாளர் பிரதாப் மற்றும்,

கொல்லச்சேரி: பூ. தீபன் ராஜ், மா. தினகரன்

மணஞ்சேரி: அ. வெங்கடேசன் தே. சசிகுமார்

கரைமாநகர்: அ. சுதாகர் தி. குமரேசன்

குன்றத்தூர் தெற்கு: பாலு, சங்கர், மதன்ராஜ்

சிவந்தாங்கள்: ப. ராஜேஷ், ப. பிரபாகரன்

அனகாபுத்தூர்: து. மாதவன், க. கபிலன் ர. பூபதி

பாபுகார்டன்: தர்மராஜ், மதன், பிரேம்

இருளஞ்சேரி: ந. அரவிந்தன், ம. மருதுபாண்டி

திருமுடிவாக்கம்: உ. தாஸ், மு. கோபி

நல்லமங்களம்: ராஜேஷ்

மாங்காடு: பிரகாஷ்

சித்தஞ்சி: மணி, மதன்

மகளிர்அணி, இளைஞர் அணி, திருநங்கை பாதுகாப்பு கழகம்

நன்றியுரை: ச. விஜி

பொதுக்கூட்டத்தில் "எங்கே மனிதநேயம்" வீதி நாடகம் நடத்தப்பட்டது.