app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Sunday, 17 August 2014 13:06

சீர்காழியில் டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம்

சீர்காழி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் பரசுராமன் முன்னிலையில் மாவட்ட கழக செயலாளர் பெரியார்செல்வம் தலைமையில் 11-8-2014 அன்று நடைபெற்றது. திடீர் உடல் நலக்குறைவால் விடுதலைசிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களால் பங்கேற்க இயலவில்லை. அவருக்கு பதிலாக சிறுத்தைகள் அமைப்பின் மாநில செயலாளர் பொதினிவளவன் கலந்து கொண்டார். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை.இராமகிருட்டிணன் கலந்து கொண்டு மீத்தேன் வாயுவை எடுப்பதனால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்தார். சூறை காற்றில் மேடை பேனர் கிழிந்துவிட்டது. அதனை தொடர்ந்து கொட்டும் மழையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஏராளமான கழகத் தோழர்களும் சிறுத்தை தோழர்களும் மழையை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் நனைந்தபடியே பொதுக்கூட்டதை கேட்டனர். புதுவையிலிருந்து மாநிலத் தலைவர் வீரமோகன், செயலாளர் சுரேசு தலைமையில் பத்து தோழர்கள் கலந்து கொண்டனர்.