app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 27 August 2014 13:43

தமிழின விரோத போக்கை கடைபிடிக்கும் இந்திய அரசினை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்

தமிழின விரோத போக்கை கடைபிடிக்கும் இந்திய அரசினை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம், 10-08-2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு, சங்கராபுரம் வட்டம் வரகூர் கிராமத்தில் நடைபெற்றது.

தலைமை: கோ. சின்னமணி
முன்னிலை: பெ. சிவகுமார், கு. குணசீலன், ரா. அருண், தா. தங்கதுரை, கு. மனோஜ், வெ. குபேரன், சி. விக்னேஷ், வெ. பிரபு, சி. சுபாஷ், நா. இளையராசா, த. பிரபுதேவா, சு. மதியழகன், கு. ரமணன், த. புருஷோத்தமன், பெ. நரேஷ், ரா. கலைச்செல்வன்.

சிறப்புரை: தலைமை கழக பிரச்சார துணை செயலாளர் சீனி விடுதலை அரசு வடக்கு மண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை மற்றும் காஞ்சி மாவட்ட தலைவர் இரா. பரந்தாமன் சிறப்புரையாற்றினார்கள்.

கழக கொடியினை வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை ஏற்றிவைத்தார்.

நிகழ்ச்சியினை விழுப்புரம் மாவட்ட தா.பெ.தி.க. ஒருங்கிணைப்பாளர் ச.கா. இளையராசா மற்றும் தோழர்கள் மு. செல்வராசு, அ.த. சசிகுமார், மு. திருநாவுக்கரசு, கு. பாஸ்கர், க. கண்ணன், செ. தமிழரசன், மெ. மயில்தாசன் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கழக தோழர்கள் மற்றும் மக்கள் விடுதலை இயக்க தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

சீனி விடுதலை அரசு மற்றும் இரா.பரந்தாமன் ஆகியோரின் இடிமுழக்க சிறப்புரை கொட்டும் மழையுடன் நிறைவடைந்தது.