app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Monday, 01 September 2014 13:43

சென்னையில் தந்தை பெரியாரின் 136வது பிறந்தநாள் விழா! 17-09-2014

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக சென்னை, இராயபேட்டை, வி.எம்.தெருவில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அங்கிருந்து காலை 8 மணிக்கு கழகத் தோழர்கள் 136 இருசர்க்கற வண்டிகளில் மற்றும் தானிகளில் ஊர்வலமாக சென்று, அண்ணாசாலை ஸ்பென்செர் பிளாசா அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் ஆனூர் செகதீசன் அவர்கள் தலைமையில், கழகத் துணைத்தலைவர் வழக்கறிஞர் செ.துரைசாமி அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்துவிட்டு, மற்ற கிளைக் கழகங்களுக்கு ஊர்வலமாக சென்று கொடி ஏற்றப்படும்.

மாலை 6 மணிக்கு, மாங்காட்டில் தந்தை பெரியாரின் 136வது பிறந்தநாள் விழா! பொதுக்கூட்டம் இல.பாண்டியராஜன் தலைமையில் நடைபெறும். கழக தோழர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் காலை 7.30 மணிக்குள் இராயபேட்டை, வி.எம்.தெருவில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு அருகில் வருமாறு அன்புடன் அழைக்கின்றேன்.

இப்படிக்கு,

வை. இளங்கோவன்

த.பெ.தி.க. சட்டத்துறை செயலாளர் மற்றும் தலைமை வழக்கறிஞர்