app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 17 September 2014 14:34

தந்தை பெரியாரின் 136 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

" சாதி " தான் என் பிரதான எதிரி !
என்றுரைத்து தன் வாழ்நாளின் இறுதிவரை சாதி ஒழிப்பிற்காகவே போராடிய அய்யா தந்தை பெரியாரின் 136 ஆம் பிறந்தநாளில்.

புதுச்சேரி :

புதுச்சேரி தந்தைபெரியார் திராவிடர் கழகம் மாநில தலைவர் தோழர் வீர மோகன் , துணைத்தலைவர் ம.இளங்கோ அவர்களின் தலைமையில் அரியாங்குப்பம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு நூற்றுக்கும்மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக பிரச்சாரம் மேற்கொண்டோம் . பிரச்சாரத்தின்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க வுக்கு அடிபணிந்து சங்கர ராமனின் கொலைவழக்கில் மேல்முறையீடு செய்யப்படமாட்டாது என்று அறிவித்த புதுச்சேரி அரசை கண்டித்தும் , உரிய நீதியை நிலைநாட்ட சமூகத்தில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட அந்த வழக்கில் எந்த அரசியல் ,அதிகார குறுக்கீடும் இல்லாமல் நீதியை நிலைநாட்டிட உடனடியாக அவ்வழக்கில் மேல்முறையீடு செய்யக்கோரி முழக்கமிட்டும் , தெருமுனை பிரச்சாரமாகவும் மேற்கொள்ளப்பட்டது .

பிரச்சாரத்தில் தோழர்கள் காளிதாஸ் மற்றும் தரணி ஆகியோருக்கு சங்கராச்சாரி வேடமிட்டு சங்கிலி போட்டு பூட்டி அடித்து இழுத்துவருவதுபோல் செய்துகாட்டினோம் அது பொதுமக்களை பெரிதும் ஈர்த்தது .

மேலும் ஊர்வலத்தின்போது தோழர்கள் கங்கா , இனியவன் ,கார்த்தி ,சூர்யா , யுவராஜ் ,கோவிந்தன் ஆகியோர் ஊரே அதிரும் அளவுக்கு பறை அடித்து , நடனமாடி அனைவரையும் உற்ச்சாகப்படுத்தினார்கள்.

கோவை:

கோவை காந்திபுரத்தில் கழக பொதுச்செயலாளர் தோழர் கு.இராமக்கிருட்டிணன் தலைமையில் தோழர்கள் பலர் ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் மேட்டுப்பாளையம் நகரில் 3 இடத்தில் கொடியேற்றப்பட்டது.

திருப்பூர்:

மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்று தமிழர்களின் சுயமரியாதை காக்க போராடிய,பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 136 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி இன்று (17.09.14) காலை 8.30 மணி அளவில் தந்தை பெரியார் திராவிடர்கழகம் சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிப்பு மற்றும் தோழர்களின் உறுதிமொழி ஏற்பு என சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாநில தலைமைச்செயற்குழு உறுப்பினர் இல.அங்ககுமார் தலைமை ஏற்க,பெரியார் பெருந்தொண்டர்ஆசிரியர் அறிவரசு அய்யா பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தார்.பேரறிஞர் அண்ணா சிலைக்கு நத்தகடையூர் தோழர் அருண் மாலை அணிவித்தார்.இவ்விழாவில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் சண்.முத்துக்குமார்,இரா.இரமேசு பாபு,பாடகர் தியாகு,ப.விசயகுமார், ஞா.கார்த்திகேயன், க.சீனிவாசன்,தி.அறிவரசு,பல்லடம் செகதிசு,திருமூர்த்தி,பாலா,தினேசு மற்றும் பெரியார் மாணவர் கழக தோழர்கள் க.அறிவரசு, ச.சி.தினேசு,லோகேசு மற்றும் கழக தோழர்கள், பெரியார் மாணவர் கழகத் தோழர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

நீலகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காமராசர் சதுக்கத்தில் தோழர்கள் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விடுதலை சிறுத்தைகள், நீலமலை அணைத்து தொழிற்சங்க தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Last modified on Wednesday, 17 September 2014 14:43