app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Saturday, 20 September 2014 12:46

சென்னையில் தந்தை பெரியாரின் 136வது பிறந்தநாள் விழா!

தந்தை பெரியார் திராவிடர் கழகமும், டாக்டர் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கமும் இணைந்து, சென்னை மற்றும் காஞ்சி மாவட்டங்கள் முழுவதும் காலை 7:30மணி முதல் இரவு 10:00மணி வரையிலும் வாகன ஊர்வலம், கொடியேற்று, படத்திறப்பு, பெயர்ப் பலகைத்திறப்பு மற்றும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடை பெற்றது.

காலை 7:30 மணிக்கு இராயப்பேட்டை வி.எம். தெருவில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு, சென்னை மாவட்ட த.பெ.தி.க. செயலாளர் ச.குமரன் தலைமையில், சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் வை.இளங்கோவன், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை, அம்பேத்கர் மக்கள் நீதி இயக்க அமைப்பாளர் இல.பாண்டியராசன் மற்றும் 200 தோழர்களுக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் கழகத் தலைவர் ஆனூர் செகதீசன் அவர்கள் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.

காலை 8:00 மணிக்கு ஓட்டல் அஜந்தா அருகில், தந்தை பெரியார் திராவிடர் கழகக் கொடியை கழகத் தலைவர் ஆனூர் செகதீசன் அவர்கள் ஏற்றிவைத்தார். பெயர்ப் பலகையை சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் வை.இளங்கோவன் அவர்கள் திறந்துவைத்தார். 136 இருசக்கர வண்டிகள் பேரணியை கரு. அண்ணாமலை தலைமையில், ச.குமரன், இரா.பரந்தாமன் மற்றும் இரவிச்சந்திரன் முன்னிலையில் கழகத் தலைவர் ஆனூர் செகதீசன் அவர்கள் துவக்கி வைத்தார்.

பேரணி காலை 8:30 மணிக்கு சிம்சனில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையை அடைந்தது. அங்கு தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் ஆனூர் செகதீசன், கழகத் துணைத் தலைவர் செ.துரைசாமி, சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் வை.இளங்கோவன் மற்றும் இல.பாண்டியராசன் ஆகியோர் மாலை அணிவித்தார்கள்.

காலை 9:00 மணிக்கு புதுப்பேட்டையில் கழகத் தலைவர் ஆனூர் செகதீசன் அவர்கள் தந்தை பெரியார் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து கழகக் கொடியை ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.

காலை 9:30 மணிக்கு சேத்துப்பட்டில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் ஆனூர் செகதீசன் அவர்கள் மாலை அணிவித்தார்கள். அங்கு அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு கழகத்தின் மூத்த உறுப்பினர் ரயில்வே க. இராசேந்திரன் அவர்கள் மாலை அணிவித்தார்கள். பின்புறம் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் சென்னை மாவட்ட த.பெ.தி.க. செயலாளர் ச.குமரன் அவர்கள் தோழர்கள் அனைவருக்கும் காலை உணவு வழங்கினார்.

பகல் 11:00 மணிக்கு தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு காஞ்சி மாவட்ட தலைவர் இரா.பரந்தாமன், அம்பேத்கர் மக்கள் நீதி இயக்க அமைப்பாளர் இல.பாண்டியராசன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் க.சுகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்தார்கள்.

பகல் 12:00 மணிக்கு எம்.ஜி.ஆர்.நகர் பேருந்து நிலையம் அருகில் சென்னை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கிரேசி விஜயகுமார் அவர்கள் கழகக் கொடியை ஏற்றிவைத்து தோழர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.

பிற்பகல் 12:30 மணிக்கு ஆலந்தூர் நகரசபை அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு காஞ்சி மாவட்ட தலைவர் இரா.பரந்தாமன், அம்பேத்கர் மக்கள் நீதி இயக்க செயலாளர் விமல்ராஜ் மற்றும் திருபெரும்புதூர் கார்த்திகேயன் ஆகியோர் மாலை அணிவித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து பல்லாவரம் மற்றும் பம்மலில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை மற்றும் தந்தை பெரியார் திரு உருவ படத்திற்கு அம்பேத்கர் மக்கள் நீதி இயக்க அமைப்பாளர் இல.பாண்டியராசன் மற்றும் காஞ்சி மாவட்ட தலைவர் இரா.பரந்தாமன் ஆகியோர் மாலை அணிவித்தார்கள்.

பிற்பகல் 1:00 மணிக்கு அனகாபுத்தூர் நூல் நிலையம் அருகே தந்தை பெரியார் திரு உருவ படத்திற்கு இரா.பரந்தாமன் அவர்கள் மாலை அணிவித்து கழகக் கொடியை ஏற்றிவைத்து சிறப்பித்தார்கள்.

பிற்பகல் 1:30 மணிக்கு அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் திருச்சி பொன்னுசாமி அவர்கள் கழகக் கொடியை ஏற்றிவைத்தார்கள். அதனருகே வைத்துள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக பெயர்ப் பலகையை வடக்கு மண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை அவர்கள் திறந்துவைத்து சிறப்பித்தார்.

பிற்பகல் 2:00 மணிக்கு கரைமாநகர் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அம்பேத்கர் மக்கள் நீதி இயக்க அமைப்பாளர் இல.பாண்டியராசன் மற்றும் திவ்வியராசு ஆகியோர் மாலை அணிவித்தார்கள்.

பிற்பகல் 2:30 மணிக்கு கரைமாநகர் பேருந்து நிறுத்தம் அருகில் தந்தை பெரியார் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்துவிட்டு தோழர் பரந்தாமன் இல்லத்தில் கரு. அண்ணாமலை அவர்கள் 200 தோழர்களுக்கு சிக்கன் பிரியாணி மதிய உணவிற்காக ஏற்பாடு செய்து இருந்தார்கள். உணவிற்கு பின் அனைத்து தோழர்களும் 1 மணி நேரம் ஓய்வு எடுத்தபடி அடுத்த நிகழ்வு பற்றி கலந்துரையாடினர்.

மாலை 4:00 மணிக்கு குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு வடக்கு மண்டல அமைப்பாளர் கரு. அண்ணாமலை, அம்பேத்கர் மக்கள் நீதி இயக்க அமைப்பாளர் இல.பாண்டியராசன் ஆகியோர் மாலை அணிவித்தார்கள். பின் கொள்ளச்சேரி, சிவன்தாங்கள் வழியாக, மாலை 5:30 மணிக்கு மாங்காடு, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு தோழர்கள் அனைவரும் மாங்காட்டில் அமைந்துள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றனர்.

மாலை 6:30 மணிக்கு மாங்காடு, எஸ்.எஸ்.கோயில் தெருவில் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்க அமைப்பாளர் இல.பாண்டியராசன் அவர்கள் தலைமையில் பொதுக்கூட்டம் தொடங்கியது.

தொடக்கத்தில் கழக பிரச்சார செயலாளர் சிற்பி இராசன் அவர்களின் "மந்திரமா? தந்திரமா?" அறிவியல் விளக்க நிகழ்ச்சியும், பிறகு கழக தோழர்களின் "எங்கே மனித நேயம்" என்ற வீதி நாடகமும் சிறப்பாக நடைபெற்றது.

பின்பு கழக துணைப் பிரச்சார செயலாளர் சீனி. விடுதலை அரசின் சிறப்புரையானது பொதுமக்கள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்குமாறு சிறப்பாக அமைந்திருந்தது.

சென்னை மாவட்ட த.பெ.தி.க. செயலாளர் ச.குமரன், கழக சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் வை.இளங்கோவன், காஞ்சி மாவட்ட தலைவர் இரா.பரந்தாமன், சிலம்பம் சிவாஜி மற்றும் கழக துணைத் தலைவர் சே.துரைசாமி சிறப்புரை ஆற்றினார்கள் கழகத் தலைவர் ஆனூர் செகதீசன் அவர்கள் தனது தெளிவான பகுத்தறிவு கருத்துக்களுடன் நிறைவாக உரையாற்றினார். தோழர் மதன்ராசு இறுதியாக நன்றியுரை ஆற்றினார்.

காலை 7:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை தொடர்ந்து, சென்னை மாவட்ட தலைவர் து.இரவிச்சந்திரன், ச.குமரன் ம்பேத்கர் மக்கள் நீதி இயக்க அமைப்பாளர் இல.பாண்டியராசன், மருத்துவர் தமிழ் சுடர், கிரேசி விசயகுமார், இளைஞரணி அமைப்பாளர் சசிகுமார், காஞ்சி மாவட்ட அமைப்பாளர் பிரதாப், கரிகாலன், ராவணன், இணையதள பொறுப்பாளர்கள் சோ. மதிவாணன், மாசிலா விநாயகமூர்த்தி மற்றும் குருசரவணன் ஆகியோரும்.

கதிரவன், சென்னை மாவட்ட பொருளாளர் கே.திலீபன், மாவட்ட துனைத் தலைவர் ஓட்டேரி பாஸ்கர், து.அருள், ப.அம்பேத்கர் மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் பகுதி இரா.வெங்கடேசன், செயசீலன், மணி மொழியான், டெய்லர் கண்ணன், இராமாபுரம் க.சுப்பிரமணி, இராயபேட்டை வாசு, வெங்கடேசன், சங்கர், கண்ணன், தினேசு, சுரேசு, நாகமணி, மயிலை பகுதி பொற்செல்வன், விநாயகம், அப்பு, வினோத், மார்க்கெட் கோபி மற்றும் சித்தார்த்தன், விஜயகுமார், பாலசுப்ரமணியன், து. முருகவேல், த.விவேக், டி.தென்னரசு, ச.பிரசாந்த் ஆகியோரும்.

காலை 7:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை தொடர்ந்து இருசக்கர வண்டிகள் பேரணி, ஆட்டோ, கார், வேன் போன்ற வண்டிகளில் 200 மேற்பட்ட தோழர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகமும், டாக்டர் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கமும் இணைந்து நடத்திய இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

மேற்கூறிய அணைத்து நிகழ்வுகளையும் இணையதள பொறுப்பாளர் தோழர் சோ. மதிவாணன் புகைப்படமாகவும், காணொளியாகவும் பதிவு செய்தார். இதற்காக கழக துணைத் தலைவர் வழக்கறிஞர் செ.துரைசாமி அவர்கள் புதிய புகைப்படக் கருவி 31,000/- ரூபாயில் வாங்கி அளித்துள்ளார்.

பேரணி செல்லும் வழி அனைத்திலும் தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் பிரச்சார பதாகைகள் வைத்து கழக தோழர்கள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

Last modified on Saturday, 20 September 2014 12:59