app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 15 October 2014 14:06

தமிழின துரோகி சுப்பிரமணியசாமியை எதிர்த்து கருப்புக்கொடி போராட்டம்

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி படகுகளை பிடித்து வைத்துக்கொள்ளுமாறும், தமிழர்களையும் தலைவர்களையும் கொச்சைபடுத்தும் வகையில் இலங்கை இராணுவ கருத்தரங்கில் கலந்துகொண்டு திமிருடன் வலியுறுத்திய, தமிழின துரோகி சுப்பிரமணியசாமிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக கருப்புக்கொடி போராட்டம் 13-10-2014 காலை 10 மணிக்கு சென்னை, ராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் சென்னை மாவட்ட செயலாளர் ச.குமரன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை அவர்கள் முன்னிலையில் 20க்கும் மேற்பட்ட கழக தோழர்கள் கருப்புக்கொடியுடன் "தமிழின துரோகி சுப்பிரமணியசாமியே தமிழ் நாட்டை விட்டு வெளியேறு" என்ற முழக்கமிட்டனர்.

கழக தோழர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்த தோழர்கள் அனைவரையும் சிந்தாதரி பேட்டையில் உள்ள "காமாட்சி மீனாட்சி" திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலை 6:00 மணிக்கு விடுவித்தனர்.

இந்த கருப்புக்கொடி போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த தோழர்கள் சசி, கோபி, ஏ.வெங்கடேசன், வாசு, சங்கர், ராசன், பரமாத்மா,ராசசேகர், சுரேசு, செயபிரகாசு மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டார்கள்.