app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Sunday, 09 November 2014 07:39

விழுப்புரத்தில் இலங்கை அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

விழுப்புரத்தில் இலங்கை அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம் மாவட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, பொய் வழக்கில் 5 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், இலங்கை அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது விழுப்புரம் தலைமை தபால் நிலையம் எதிரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை முன்பாக நடைபெற்றது. நேற்று 8-11-2014 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

தலைமை: கரு.அண்ணாமலை - வடக்குமண்டல அமைப்பாளர், த.பெ.தி.க. சென்னை.

முன்னிலை: அ.ஜோதி, மு.சங்கர், ப.இளையராசா, ம.உமாபதி - த.பெ.தி.க. விழுப்புரம் மாவட்டம்.

த.பெ.தி.க. காஞ்சி மாவட்ட தலைவர் இரா.பரந்தாமன், த.பெ.தி.க. இணையதள பொறுப்பாளர் சோ.மதிவாணன், த.பெ.தி.க. புதுவை மாநில தலைவர் வீரமோகன் மற்றும் தோழர்கள், நாகராஜ், அம்பேத்கர் மக்கள் நீதி இயக்க செயலாளர் விமல்ராஜ், கதிரவன் த.பெ.தி.க.மும்பை ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசூர்: தமிழரசன், சரத்குமார், பிரதீப், அசோக், விக்னேஷ், பாலாஜி, அஜீத், ரகு, கபிலன் மற்றும் ராஜதுரை.

மூகார்பாளையம்: சசிகுமார், சிவா, திருநாவுக்கரசு, பாஸ்கர், தமிழரசன், அருண், விஜி, விக்னேஷ், ஆறுமுகம் மற்றும் நூற்றுக்கணக்கான கழக தோழர்கள் கலந்து கொண்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்தனர்.

படங்கள் சோ.மதிவாணன்,
செய்திப்பிரிவு-தந்தை பெரியார் திராவிடர்கழகம்.
சென்னை மாவட்டம்.

Last modified on Saturday, 15 November 2014 15:30