app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Saturday, 29 November 2014 08:09

கடலூ‌ர் மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கடலூ‌ர் மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் டவுன் ஹாலில் வடக்கு மண்டல அமைப்பு செயலாளர் கரு.அண்ணாமலை,கடலூ‌ர் மாவட்ட தலைவர் அழகிரி ஆகியோர் முன்னிலை வகிக்க கழக பொதுச்செயலாளர் கோவை.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது.

புவனகிரி,கீரப்பாளையம்,ஆலப்பாக்கம்,தெற்கு பூவை,குச்சிபாளையம்,புளியங்குடி, பூவாணிகுப்பம் மற்றும் கடலூ‌ர் பகுதிகளில் இருந்து 40 புதிய தோழர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர். பெரும்பாலான தோழர்கள் திராவிடர் கழகத்திலிருந்து விலகி பெரியார் கொள்கைகளை சமரசமின்றி சரியான பாதையில் கொண்டு செல்லும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்தனர்.இணைந்த தோழர்களில் சிலரின் பெயரும் ஊரும் கோ.கார்த்தி (ஆலப்பாக்கம்), பெ.அச்சுதன் (ஆலப்பாக்கம்), மு.கார்த்திகேயன் (கடலூ‌ர்), தெ.தென்னரசு (கீரப்பாளையம்), அ.சதிசுகுமார் (புவனகிரி), v.ரமேசு (குச்சிபாளையம்), ர.ராமு (கீரப்பாளையம்), கா.கரிகாலன் (புளியங்குடி), வி.வினோத் (தெற்கு பூவை),அ.சிவன்ராஜ் (தெற்கு பூவை).

நிகழ்வில் புதுச்சேரி மாநில தலைவர் வீரமோகன்,துணைத்தலைவர் இளங்கோ,செயலாளர் சுரேசு, காப்பாளர் வீர.இராஜேந்திரன்,அரியாங்குப்பம் தொகுதி தலைவர் பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.