app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 10 December 2014 14:16

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் மாட்டு வியாபாரிகள், மாட்டிறைச்சி வியாபாரிகள் தர்ணாப் போராட்டம்

பசு பால் கறக்கும் வரை தெய்வமாகப் போற்றுகிறார்கள் !

பால் கறக்க முடியாத நிலையாகும் போது அடிமாடாக சந்தையில் விற்கிறார்கள் !

சந்தையில் அந்த மாடுகளை வாங்கி இறைச்சிக்காகப் பயன்படுத்துகிறார்கள் !

நம் நாட்டில் கோழி, ஆடு, மாடு, போன்றவைகளை உணவாகப் பயன்படுத்துகிறோம் !

இறைச்சிக்காக கோழி, ஆடு, மாடு, ஒரு மாவட்டத்திலிருந்து, மற்ற மாவட்டங்களுக்கு வாகனங்களில் ஏற்றிச் செல்கிறார்கள் !

கோழி, ஆடுகளைத் தடுக்காதவர்கள், மாடுகளை மட்டும் தடுத்து, வாகன ஓட்டுனர்களைத் தாக்கி, ஓட்டுனர்கள் வைத்திருக்கும் பணம் செல்போன் முதலியவற்றையும் கொள்ளையடித்து, மாடுகளையும், கோசாலை என்று சொல்லுமிடங்களுக்கு கொண்டு செல்கிறார்கள் நவீனக் கொள்ளையர்கள் !

அதன் பின் காவல்துறையினரிடம் புகார் செய்து, நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று, காவல்துறையினருடன் கோசாலை சென்று மாடுகளைக் கேட்டால், சரியாக அந்த மாடுகளுக்கு உணவு கொடுக்காமலே, ஒரு நாளைக்கு 250 ரூபாய் வீதம் ஒவ்வொரு நாட்களுக்கும் பணம் கேட்டு காவல்துறையினர் முன்பாகவே கட்டப் பஞ்சாயத்து பேசுகிறார்கள் கொள்ளையர்கள் !

இது போல் முதலில் 35 மாடுகளைப் பிடித்துச் சென்றார்கள் !

அவற்றை நீதி மன்ற உத்தரவுபெற்ற பின்னும் பணம் கொடுத்து மீட்டுச் சென்றிருக்கிறார்கள் !

அடுத்து 216 மாடுகளை போலி கோசாலைக் கொள்ளையர்கள் பிடித்துச் சென்று, நீதிமன்ற உத்தரவு பெற்று காவல்த்துறையினருடன் சென்று கேட்டும் கொள்ளையர்கள் கொடுக்காமல் பல லட்சம் பணம் கேட்டு மாடுகளைக் கொடுக்காததால், கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர் உடுமலைபேட்டை போன்ற பகுதுகளைச் சேர்ந்த மாட்டு வியாபாரிகள், மாட்டிறைச்சி வியாபாரிகள் இன்று 08-12-2014 ஒருநாள் கடை அடிப்புச் செய்து, அனைவரும் குடும்பத்துடன் ஆயிரக்கணக்கில் ஒற்றுமையாக வந்து, வரலாறு காணாத அளவில், கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில், மிகவும் சிறப்பாகத் தர்ணாப் போராட்டம் செய்தார்கள் !

இன்று 08-12-2014 காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை !

கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர் உடுமலைபேட்டை போன்ற பகுதுகளைச் சேர்ந்த மாட்டு வியாபாரிகள், மாட்டிறைச்சி வியாபாரிகள் இன்று 08-12-2014 ஒருநாள் கடை அடிப்புச் செய்து, அனைவரும் குடும்பத்துடன் ஆயிரக்கணக்கில் ஒற்றுமையாக வந்தனர் !

Last modified on Wednesday, 10 December 2014 14:20