app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Sunday, 14 December 2014 12:34

கேரளா முதல்வர் உமன்சான்டியை கண்டித்து உதகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

முல்லைப் பெரியார்_ பாம்பாறு மற்றும் ஆனைக்கட்டி என்று தமிழர்களின் நீர் ஆதாரங்களை தடுத்து, தொடர்ந்து தமிழருக்கு தோரகம் இழைத்து வரும் கேரளா அரசை கண்டித்தும், இன்று 14-12-2014 ஊட்டி வரும் கேரளா முதல்வர் உமன்சான்டியை கண்டித்து உதகையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் இன்று 14-12-2014 காலை 10.30 மணிக்கு தோழர்கள் ஓரிடத்தில் இணைவதற்கு முன்னரே அனைவரையும் பேருந்துநிலையம், மார்க்கெட், என பல இடங்களில் காவல் துறையினர் கைது செய்தனர். தோழர்கள் 35 பேர் கைது.

தந்தை பெரியார் திராவிடர் கழக நீலகிரி மாவட்ட செயலாளர் பரத், உதகை நகர செயலாளர் நகுவேதிரன், கோத்தகிரி நகர செயலாளர் ஜெய் குமார், கோவை பிராபாகரன் மற்றும் குழந்தைகள், பெண்கள் என தோழர்கள் பலர் கோவை மற்றும் பல்வேறு இடங்களில்லிருந்து பங்கேற்றனர்.

Last modified on Sunday, 14 December 2014 16:53