app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Sunday, 14 December 2014 12:46

சென்னையில் தாலியருத்து நூதன ஆர்ப்பாட்டம்

மது ஒழிப்பிற்காக ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி சாய்த்த பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்கள் வழி வந்த தோழர்கள் நூதன ஆர்பாட்டம். 13-12-2014 கலை 10.00மணியளவில் சிவன்தாங்கள் பேருந்து நிலையம் எதிரில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக சார்பு மன்றம் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் தாலியருத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தலைமை: ம.கோபி - காஞ்சி மாவட்ட பொருளாளர்
முன்னிலை: ராஜேஷ்,பிரபாகரன், ரகுவரன், விஜி, வெங்கடேஷ், தமிழ்வாணன், மணி, ஆர்த்தி திவ்யா.
சிறப்புரை: கரு. அண்ணாமலை - த.பெ.தி.க. வடக்குமண்டல அமைப்பாளர்.
இல.பாண்டியராசன் - அ.ம.நீ.இயக்க மாநில அமைப்பாளர்.
இரா. பரந்தாமன் - காஞ்சி மாவட்ட தலைவர், த.பெ.தி.க.
திவ்யராஜ் - காஞ்சி மாவட்ட தலைவர், அ.ம.நீ.இயக்கம்.
விமல்ராஜ் - காஞ்சி மாவட்ட செயலாளர், அ.ம.நீ.இயக்கம்.
மற்றும் மகளிரணி, திருநங்கை பாதுகாப்பு கழகம், உளுந்தை ரமேஷ், சுகேந்திரன் போன்ற 100 கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டார்கள்.

மதுக்கடையை அகற்றக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக சார்பு மன்றமான அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் நடத்திய இந்த போராட்டத்திற்கு தோழர்கள் அணித்திரண்டு வந்து வெற்றிபெறச் செய்தார்கள்.

படங்கள் - சோ.மதிவாணன்
செய்திப்பிரிவு,
தந்தை பெரியார் திராவிடர் கழகம் - சென்னை மாவட்டம்.