app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Monday, 15 December 2014 16:32

புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் கொள்கை விளக்க பயிலரங்கம்

புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் கொள்கை விளக்க பயிலரங்கம் அரியாங்குப்பம் புதிய பாலம் அருகில் உணர்வாளர் சக்திவேல் தலைமையில் இயங்கும் பன்னாட்டு மனித உரிமைகள் கழக தலைமை அலுவலக கட்டிட வளாகத்தில் இயற்கை சூழலில் 14-12-2014 ஞாயிறு காலை 10-00 மணிக்கு கழக பாடகர் தர்மபுரி சுந்தர் இன உணர்வு பாடல்களை பாட நிகழ்ச்சி தொடங்கியது.

 

மாநில தலைவர் வீரமோகன்,துணைத்தலைவர் இளங்கோ,செயலாளர் சுரேசு,இளைஞர் அணி தலைவர் சிவமுருகன்,தொகுதி தலைவர் பெருமாள் ஆகியோர் தற்பொழுதைய சூழலில் பயிலரங்க தேவை குறித்து பேசினர்.கழக வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை தொடக்க உரையாற்றினார்.

 

தோழர் வே.மதிமாறன் அவர்கள் திராவிட இயக்கம் ஏன்? எனும் தலைப்பில் அலங்கார வார்த்தைகளின்றி திராவிடம் என்ன கிழித்தது என்று கேட்கும் பதவிக்காக அலையும் கூட்டத்திற்கு பதில் அளிக்கும் விதமாக ஆதாரத்துடன் 2 மணி நேரம் பேசினார். உணவு இடைவேளைக்கு பிறகு கழக பிரச்சார அணி செயலாளர் அய்யா சிற்பி இராசன் அவர்கள் பகுத்தறிவு எனு்ம் தலைப்பில் அவருக்கே உரித்தான நகைச்சுவையுணர்வுடன் கருத்தாழமிக்க உரைவீச்சை வழங்கினார்.கடவுள்கள் பிறப்பு குறித்து இலைமறை காய்மறையாக அவர் கூறிய விதம் புதிய தோழர்கள் மனதில் கொஞ்சம் ஒட்டி இருந்த கடவுள் நம்பிக்கையையும் தகற்த்தெறிந்தது.

 

இறுதியாக கழக துணை பிரச்சார அணி செயலாளர் சீனி.விடுதலைஅரசு அவர்கள் பெரியார் யார்? எனும் தலைப்பில் இந்த தமிழ் மக்களுக்காக பெரியார் பட்ட துயறங்களையும்,நமது தோழர்கள் எதிராளிகளின் எத்தகைய கேள்விகளுக்கும் பதில் வழங்கும் விதமாகவும் பேசினார்.தொகுதி செயலாளர் பாஸ்கரன் நன்றி கூற பயிலரங்கம் இரவு 7-00 மணியளவி்ல் நிறைவடைந்தது.