app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Monday, 16 February 2015 17:14

சென்னையில் நாத்திகர் விழா !

சென்னை மாவட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக நாத்திகர் விழா! 07-02-2015, மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியை திரு.விக. நகர் பெரவள்ளூர் சந்திப்பில் த.பெ.தி.க. புதுவை மாநில தலைவர் வீரமோகன் தொடங்கிவைத்தார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் கோவை கு.இராமகிருட்டிணன், த.பெ.தி.க.கடலூர் மாவட்ட தலைவர் தோழர் கு.அழகிரி, த.பெ.தி.க.புதுவை மாநில துணைத்தலைவர் தோழர் இளங்கோவன், த.பெ.தி.க.விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் இளையராஜா, த.பெ.தி.க.திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் சுரேந்திரன் ஆகியோர் முன்னிலையில் பேரணி பறை முழக்கத்துடன் இனிதே தொடங்கியது.

சென்னை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் தோழர் கிரேசி விசயகுமார் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு பெண்கள் கடவுள் இல்லை என்று கூறி அக்னிசட்டி எடுத்து "தீசட்டி இங்கே மாரியாத்தா எங்கே?" என்று முழக்கமிட்டு பேரணியில் முதலாவதாக புறபட்டார்கள்.

இதனை தொடர்ந்து ஆண்கள் அலகு குத்தி, கார் இழுத்துக்கொண்டு, ஆணி படுக்கையில் படுத்துக்கொண்டு, உடம்பில் தீவைத்து எரித்தல், பறவை காவடி போன்ற அறிவியல் விளக்க நிகழ்சிகள் செய்து காண்பிக்கப்பட்டன.

மாவீரன் கொளத்தூர் முத்துக்குமார் நினைவிடம் வரை பேராணி சிறப்பாக வந்துகொண்டிருந்தது உயர்நீதிமன்ற உத்திரவுப்படி காவல்துறையினர் இந்த இடத்தோடு முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க பேரணியானது இனிதே நிறைவுற்றது. பின்பு தோழர்கள் அனைவரும் பல்வேறு வண்டிகளில் பொதுக்கூட்ட மேடைக்கு புறப்பட்டார்கள்.

பேரணியின் இடையில் குழப்பம் விளைவித்து கலவரத்தை உருவாக்கும் எண்ணத்துடன் இந்து அமைப்பை சேர்ந்த காவி விஷமிகள் பேரணியில் இடையூறு செய்ய முயன்றார்கள். காவல் துறையினர் அந்த விஷமிகள் 8 பேர்களையும் கைதுசெய்து கலவரம் உருவாகும் சூழ்நிலையை தடுத்து நிறுத்தினார்கள்.

கலவரம் செய்யமுயன்ற கருங்காலிகலுக்கு எதிராக கொந்தளித்த கழக தோழர்களை காவல்துறையினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொதுசெயலாளர் மற்றும் அமைப்பாளர்கள் சமாதானப்படுத்தினார்கள்.

இந்து அமைப்பை சேர்ந்த விஷமிகளிடம் சண்டைபோடுவது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கையல்ல. மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடக்கும் எம்மக்களுக்கு நாங்கள் தீ மிதிப்பது, அக்னி சட்டி எடுப்பது, அலகு குத்தி காவடி எடுப்பது கார் இழுப்பது, ஆணிபடுக்கை மற்றும் பறவை காவடி போன்ற செயல்கள் கடவுள் சக்தியால் இல்லை மனித சக்தி மற்றும் அறிவியல் என்று புரியவைப்பதே எங்களின் நோக்கமாகும்.

புதுவையிலிருந்து தோழர் வீரமோகன் தலைமையிலும், கடலூரிலிருந்து தோழர் அழகிரி தலைமையிலும், விழுப்புரத்திலிருந்து தோழர் அரசூர் பாபு மற்றும் சங்கராபுரம் தோழர் செல்வராசு தலைமையிலும், காஞ்சி மாவட்டத்திலிருந்து தோழர் பரந்தாமன் தலைமையிலும், காஞ்சி மாவட்ட அம்பேத்கர் மக்கள் நீதியியக்க தோழர்கள் பாண்டியராஜன் மற்றும் விமல்ராஜ் தலைமையிலும், திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் சுரேந்திரன் தலைமையிலும், கோவையிலிருந்து தோழர் கோபால் தலைமையிலும், பொள்ளாச்சியிலிருந்து தோழர் கா.சு. நாகராசு தலைமையிலும், திருச்சியிலிருந்து தோழர் சரவணன் தலைமையிலும், ஈரோட்டிலிருந்து தோழர் குமரகுரு தலைமையிலும் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ச.குமரன் தலைமையிலும் 500க்கும் மேற்பட்ட தோழர்கள் இந்த மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியை வெற்றிப் பேரணியாக மாற்றிக் காட்டினார்கள்.

இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதிமறுத்தபோதும், சென்னை உயர்நீதிமன்றத்திலே இந்த பகுத்தறிவு பேரணி பற்றியும், தந்தை பெரியார் அவர்களின் தொண்டுகள் பற்றி நீதிபதியிடம் எடுத்துக் கூறியும் காவல் துறையின் தடையை நீக்கி இந்த பகுத்தறிவு பேரணிக்கு அனுமதி வாங்கிய பெருமை த.பெ.தி.க.துணைத்தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அய்யா செ.துரைசாமி அவர்களையும், கழகத்தின் சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் வை.இளங்கோவன் அவர்களையும் சேரும்.

இந்த பேரணியில் அனைத்து நிகழ்சிகளையும் அண்ணன் கோவை ஆறுச்சாமி அவர்களும், தோழர் கோபால் அவர்களும் சிறப்பாக ஒழுங்குபடுத்தினார்கள்.

ஊர்வலம் முடிவில் நாத்திகர் விழா கே.திலீபன் (செ.மா.பொருளாளர், த.பெ.தி.க.) தலைமையிலும்,

கு.அழகிரி (கடலூர் மாவட்ட தலைவர், த.பெ.தி.க.), இளங்கோவன் (புதுவை மா.து.தலைவர், த.பெ.தி.க.), இளையராஜா (விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர், த.பெ.தி.க.), சுரேந்திரன் (திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர், த.பெ.தி.க.) முன்னிலையிலும்,

வரவேற்புரை: கரு.அண்ணாமலை (வடக்கு மண்டல அமைப்பாளர், த.பெ.தி.க.),

சிறப்புரை: கோவை கு.இராமகிருட்டிணன் (பொதுச் செயலாளர், த.பெ.தி.க.), மருத்துவர்.எழிலன் (நிறுவனர்.இளைஞர் இயக்கம்.), வெ.ஆறுச்சாமி (மாநில செயற்குழு உறுப்பினர், த.பெ.தி.க.), வை.இளங்கோவன் (சட்டத்துறை செயலாளர், த.பெ.தி.க.), சீனி.விடுதளையரசு (மாநில பிரசார து.செயலாளர், த.பெ.தி.க.), கா.சு.நாகராசு (பொள்ளாச்சி மாவட்ட அமைப்பாளர், த.பெ.தி.க.), ப.அமர்நாத் (செயற்குழு உறுப்பினர், த.பெ.தி.க.), இரா.பரந்தாமன் (காஞ்சி மாவட்ட செயலாளர், த.பெ.தி.க.), இல.பாண்டியராஜன்(அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம்),

நன்றியுரை: ச.குமரன் (சென்னை மாவட்ட செயலாளர், த.பெ.தி.க.)

விழாக்குழுவினர்கள்: கிரேசி.விஜயகுமார், பாஸ்கர், நாகராஜ், அருள், சுப்பிரமணியன், சோ.மதிவாணன், குருசரவணன், வி.மூ.மாசிலாமணி, செயசீலன், மணிமொழியான், துரைராசு, சைதை ராசு, குமரேசன், சசிகுமார், ராஜ்குமார் மற்றும் தோழர்கள்.

காஞ்சி மாவட்ட த.பெ.தி.க மற்றும் அ.ம.நீ.இ தோழர்களின் எங்கே மனிதநேயம் என்ற வீதிநாடகம் அனைவரையும் கவரும்படியும் சிந்திக்கும் வகையிலும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

படங்கள்: சோ.மதிவாணன்
செய்திப்பிரிவு - தந்தை பெரியார் திராவிடர் கழகம்
சென்னை மாவட்டம்.

Last modified on Friday, 20 February 2015 07:05