app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Monday, 16 February 2015 17:19

காணாமல் போன கணவரை கண்டுபிடித்துக் கொடுக்கக் கோரி தஞ்சம் அடைந்த நாய்

காணாமல் போன கணவரை கண்டுபிடித்துக் கொடுக்கக் கோரி தஞ்சம் அடைந்த நாய்

அனுப்புனர்:
அஞ்சலி(பொமரேனியன் நாய்)
5 முக்கு(சந்து)
கோயம்புத்தூர்

பெறுநர்:
உயர் திரு.காவல் துறை ஆணையாளர் அவர்கள்
கோயம்புத்தூர் மாநகரம்
கோயம்புத்தூர்

அய்யா,

பொருள்:காணாமல் போன கணவரை கண்டுபிடித்துக் கொடுக்கக் கோரி

நான் கோவையில் வசித்து வருகிறேன் நான் மனிதர்களாள் வாயில்லா உயிரினம் என்றழைக்கப்படும் நாய்(பொமரேனியன்) இனத்தைச் சேர்ந்தவள் மனிதர்களால் கொண்டாடப்படும் காதலர் நாளானது சமுதாய சீர்கேடு என்று கூறி இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த சில நபர்கள் காதலர்களை அவமானப் படுத்துவதாகக் கருதி கடந்த 2014 ஆம் ஆண்டு இதே காதலர் நாளில் (14.02.2014) எனக்கு வலுக்கட்டாயமாக தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார் அன்று எனக்கு தாலி கட்டிய நபரை அன்று முதல் இன்றுவரை காணவில்லை இந்து மத கலாச்சாரத்தின் படி நான் அவரை கணவராகக் கருதி பல இடங்களிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை தங்கள் அவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,
இப்படிக்கு,
அஞ்சலி (எ) பொமரேனியன் நாய்

நகல்
மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமதி.மோகா காந்தி அவர்கள்
எங்களைப் போன்ற வாயில்ல உயிரினங்கள் உடல் வருந்தினாலே ஓடோடி வந்து உதவும் உள்ளம் வருந்தியிருக்கும் எனக்கு ஒரு தீர்பு சொல்ல மாட்டாரா?