Friday, 03 August 2018 18:03

உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திட ஆர்ப்பாட்டம்

ஐ.ஜி பொன்மாணிக்கவேலை பகடைகாயாய் பயன்படுத்தி, இந்து அறநிலையத்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தி,அதை முடக்கும் பணியை மறைமுகமாக செய்யும் ஆர்எஸ்எஸ் கும்பலை கண்டித்தும், மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஐக்கு மாற்றப்பட்ட சிலை கடத்தல் வழக்கை பொன். மாணிக்கவேல் கையில் தராமல்,பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திட கோரியும், சிலை கடத்தலுக்கு உடந்தையாக இருந்து அனைத்து கோவில் பார்ப்பன அச்சகர்களையும் கைது செய்யக் கோரியும், இன்று (03/08/2018) மாலை 5 மணி அளிவில், கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகில், பொதுச் செயலாளர் கோவை.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Last modified on Friday, 03 August 2018 18:07
back to top