app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Monday, 13 August 2018 00:27

சென்னையில் தபெதிக தோழர்கள் 9 பேர் கைது புழல் சிறையில் அடைப்பு

தபெதிக தோழர்கள் 9 பேர் கைது புழல் சிறையில் அடைப்பு

 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு,  8 வழிச்சாலை விவகாரங்கள் குறித்து பேசியதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு மற்றும் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்ககோரி ஜெர்மனியில் உரையாற்றிய திருமுருகன் காந்தி அவர்களின் கைதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு போலீஸ் தடையை மீறி மாலை அணிவித்தனர், அதற்காக தபெதிக தோழர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டு, சூளைமேட்டில் உள்ள மெஜிஸ்ட்ரேட் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் காவலுக்காக சென்னை புழல் மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட தோழர்களின் விவரம்:

 

1) ச.குமரன்

சென்னை மாவட்டச் செயலாளர்

 

2) கே.திலீபன்

சென்னை மாவட்ட பொருளாளர்

 

3) ராஜ் குமார்

காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்

 

4) குரு சரவணன்

 

5) மெக்கானிக் சுரேஷ்

 

6) பாலு

 

7) வல்லரசு

 

8) அருள்


9) சிலம்பரசன்

 

தமிழர் விரோத பாஜகவின் எடுபிடியாக இருந்து செயல்படும் அடிமை எடப்பாடி அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம் !!

 

ஒடுக்க ஒடுக்க இன்னும் வீரித்தோடு களத்தில் நிற்பவர்கள் தான் பெரியார் தொண்டர்கள் என்பதை காலம் பதில் சொல்லும் !!

Last modified on Tuesday, 14 August 2018 04:20