app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Thursday, 30 August 2018 04:39

தந்தை பெரியார் திராவிடர்_கழகத்தின் பொதுச் செயலாளர், கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் பொது வாழ்வில் தனது 50 ஆவது ஆண்டை நிறைவு செய்கிறார்.

சிலர் பொது வாழ்வில் ஓர் அங்கீகாரம் பெற்ற நிலையை அடைந்தவுடன், கவுரவமான தலைவர்களாகவே வலம் வருவர் ஆனால் இவரோ தோழர்களிடமோ, முன் பின் தெரியாத பொது மக்களிடமோ கூட ஒரு அமைப்பின் பொதுச் செயலாளர் என்ற ரீதியில் ஒரு நாளும் அணுகி பார்த்ததில்லை சராசரி தொண்டனை போல தான் நடந்து கொள்வார், இவரின் பேச்சோ, உடல் மொழியோ, விடுதலைப்புலிகளுக்கு பக்கபலமாக இருந்து, ஆயுத வழக்கில் 3 வருடம் சிறை சென்றவர் போலவோ, திராவிடர் கழகத்தில் இருந்த பிரிந்த போது, கலைஞராலேயே நேரடியாக திமுகவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டவர் போலவோ, பொது வாழ்வில் உள்ள அனைவராலும் போராளி என புகழப்படும் நபர் போலவோ பெரியாராலேயே திராவிடர் கழக கோவை மாவட்டச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டவர் போலவோ பின்னர் திராவிடர் கழக்கத்தின் இளைஞர் அணிச்செயலாளராக இருந்தவர் போலவோ, அதன் பின்னர் கடந்த 30 வருடங்களாக பெரியாரிய இயக்கத்தின் பொதுச்_செயலாளராக இருப்பவர் போலவோ, முற்றிலும் தெரியாது, இவர் செய்த காரியத்திற்கும், இவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லாதவர் போலவே காட்சியளிப்பார்.


ஒரு நாள் கூட இவர் ஓய்வெடுத்து பார்த்ததில்லை, ஒன்று தினமும் ஏதாவது ஓர் போராட்ட களத்தில் காணலாம், அல்லது கோவை பெரியார் படிப்பகத்தில் கட்டாயம் காணலாம் எப்படி ஒரு மனிதனால் ஒரு நாள் கூட ஓய்வே எடுக்காமல் சமுதாய_பணியிலேயே கழிக்க முடிகிறது எனத் தோன்றும், பெரியார் பாசறையில் அச்சுவார்க்கப்பட்டவருக்கு ஒய்வும் சலிப்பும் தற்கொலைக்கு_சமம் என்பது பசுமரத்தாணி நெஞ்சில் பதிந்ததில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை சமுதாயப் பணியில் திருப்தி அடைந்தவர்களுக்கு, அப்பணி செய்வதே கோக்கைன்'யை விட அதிகம் போதை தரக் கூடியது என்ற உண்மையை இவரை கண்டால் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் அமைப்பின் மொத்த செயல்பாடுகளையும் ஒற்றை மனிதனாக தோளில் சுமக்கும் தந்தை பெரியார் திராவிடர்_கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் பொது வாழ்வில் தனது 50 ஆவது ஆண்டை நிறைவு செய்கிறார்.


போராட்ட வாழ்வில்_50 ஆண்டுகள் கோவை கு.இராமகிருட்டிணன்


1968 ஆம் ஆண்டு காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் நடந்த #திராவிடர்_கழக பொதுக் கூட்டத்தில் முதன் முதல் பெரியார் பேசியதை கேட்டார் அதில் பெரியார் கொள்கையில் ஏற்பட்ட அதீத ஈடுபாட்டால் திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட துவங்கினார், 1970 ஆம் ஆண்டு கோவை மாவட்ட மாணவர் அணிசெயலாளராக பெரியார் நியமித்தார் 1972 ஆம் ஆண்டு கோவை மாவட்டச்_செயலாளராக பெரியாரால் நியமிக்கப்படுகிறார் இவர் முன் நின்று நடத்திய_போராட்டங்கள்


திராவிடர் கழகத்தில் இளைஞர் அணி செயலாளராக இருந்த போது, விடுதலைப்புலிகளை ஆதரித்து மாணவர்களை ஒருங்கிணைத்து பெரும் போராட்டங்கள் நடத்தினார்.


நதிநீர் பிரச்சனைக்காக அட்டப்பாடியில், முக்காலியில் கேரளா அரசு அணை கட்ட முயற்சித்த போது அனைத்து கட்சிகளையும், மக்களையும் திரட்டி போராடி தடுத்து நிறுத்தினார்


சிறுவாணி_பவானி ஆறுகளை கேரளா அரசு தடுக்க முயன்ற போது அதே போல போராடி தடுத்தார்.

 

தொடர் வண்டித்துறையில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், கோவை வராமல் கேரளா சென்ற பல தொடர்வண்டிகளை போராடி கோவைக்கு வரச் செய்தார் பாலக்காடு தொடர்வண்டி மண்டலத்திலிருந்து தமிழ்நாட்டு பகுதியை பிரித்து சேலம்_கோட்டத்தில் இணைக்க பல போராட்டங்களை நடத்தி வெற்றிகண்டார்.


4000 திற்கும் அதிகமான சாதி  மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்துள்ள சாதி மறுப்பு போராளி.

 


ஈழ விடுதலையும் கோவை கு.இராமகிருட்டிணனும்.


ஈழத்தில் நடந்த இனக்கலவரத்தை கண்டித்து 1983 ஆம் ஆண்டு இருபதாயிரம் மாணவர்களை திரட்டி ரயில் மறியல் செய்தார்

 

அதன் பின்னர், இனப்படுகொலை புகைப்பட_கண்காட்சி நடத்தி, ஈழவிடுதலைக்கு ஆதரவாக மக்களை ஒன்று திரட்டினார்


தொடரும் ஈழப்படுகொலையை கண்டித்து 1000_மண்டை_ஓடுகள் ஊர்வலம் நடத்தி, மக்கள் கவனத்தை ஈர்த்தார்


1990 ஆம் ஆண்டு பிரபாகரன் அவர்களின் அழைப்பை ஏற்று ஈழம் சென்று வன்னிக்காடுகளில் புலிகளோடு இருந்து வந்தார்.


ராசீவ் மரணத்திற்கு பின்பு அமைக்கப்பட்ட ஜெயின் கமிசன் ஒட்டுமொத்த தமிழர்களையுமே குற்றவாளிகளாக சித்தரிப்பதை எதிர்த்து ஜெயின்கமிசனை கழுதைக்கு திங்க வைக்கும் போராட்டத்தை நடத்தினார்.

 


சந்தித்த_வழக்குகள்


1976 ஆம் ஆண்டு நெருக்கடி நிலையில் மிசாவில் கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டு கோவை சிறையில் இருந்தார்.


அதன் பிறகு வந்த இந்திரா காந்திக்கு கறுப்புக் கோடி காண்பித்து 30 நாட்கள் சிறை.

 

காவேரி நீர் பிரச்சனையில் போராடி திருச்சி சிறையில் 15 நாட்கள்.

 

மும்பையில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, பம்பாயில் தமிழன்தாக்கப்பட்டால் கோவையில் வடநாட்டான் கொல்லப்படுவான் என சுவரொட்டி ஒட்டியதற்காக 8 நாட்கள் சிறை.


ராஜீவ் காந்தி தமிழ்நாட்டிற்கு 1989 ஆம் ஆண்டு 11 முறை வந்த போதும் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்களும், ஆறுச்சாமி அவர்களும் 11 முறையும் 4 நாள் வீதம் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்

 

புலிகளின் தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 புலிகள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட போது கோவையில் பேருந்தை தீயிட்டு கொளுத்திய வழக்கில் 15 நாள் சிறை.


தளபதி கிட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக வேலூர் சிறையில் 25 நாட்கள் அடைப்பு.


விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் தயாரித்து கொடுத்ததாகவும், வீட்டில் வெடி மருந்து வைத்து இருந்ததாகவும் குற்றம் சாட்டி தடாசட்டத்தில் ஆறுச்சாமி அவர்களோடு சேர்த்தது 3 ஆண்டுகள்சிறை.


2009 ஆம் ஆண்டு ஈழத்தில் தமிழர்களை கொள்ள ஆயுதம் எடுத்துச் சென்ற இந்தியராணுவவண்டியை அடித்து நொறுக்கியதில், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது.


2012 ஆம் ஆண்டு பிராமணாள்கபே பெயர் அழிப்பு போராட்டத்தில் 21 நாட்கள் சிறையில் அடைப்பு.

தந்தை பெரியார் திராவிடர்_கழகத்தின் பொதுச் செயலாளர், கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சில முக்கிய போராட்டங்களை மட்டுமே இங்கே பதிவுசெய்துளோம். மேலும் அவரை பற்றிய செய்தியை பதிவுசெய்வதும் இதுவே முதல் முறை.

Last modified on Thursday, 30 August 2018 05:57