app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Thursday, 13 September 2018 12:43

வடநாட்டு விநாயகர் சிலை ஆக்கிரமிப்பு, சென்னையில் பெருமளவில் குறைப்பு

தந்தை பெரியார் திராவிடர் கழக சட்ட நடவடிக்கையால் வடநாட்டு விநாயகர் சிலை ஆக்கிரமிப்பு, சென்னையில் பெருமளவில் குறைப்பு அனுமதியில்லாமலும்,பொது மக்களுக்கு இடஞ்சல் தரும் வகையிலும் சென்னையில் விநாயகர் சிலைகள் முந்தைய ஆண்டுகளில்  வைக்கப்பட்டதை உதாரணம் காட்டி,, விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கக் கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று  விசாரணைக்கு வந்தது,,,வழக்கை விசாரித்த நீதிபதி,சிலை வைக்க தடை விதிக்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்தார் இருந்த போதிலும், அனுமதி இல்லாமல் சிலைகளை வைப்பது தடுக்கப்படும் எனவும்,மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வரையறையை மீறாமல் பார்த்துக் கொள்ளப்படும் என உத்திரவாதம் அளித்தார்.

இதனடிப்படையில், சென்னையில் சென்ற ஆண்டு 10,000 க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெறும் 2520 சிலைகள் வைக்க தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.