app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 19 September 2018 05:40

தந்தை பெரியாரின் 140- ஆவது பிறந்த நாள் விழா 17.09.2018

தந்தை பெரியாரின் 140- ஆவது பிறந்த நாள் விழா 17.09.2018 தமிழகமெங்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் எழிச்சியுடன் கொண்டாடப்பட்டது.
சென்னை

ந்தை பெரியார் திராவிடர் கழகம் சென்னை மாவட்டம் அறிவு ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாவட்டம் சார்ந்த ச.குமரன் தலைமையில் விதம் தெரு எம்ஜிஆர் நகர் ஆலந்தூர் ஆகிய இடங்களில் வாகன பேரணியாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

காஞ்சி மாவட்டம்

தந்தை பெரியார் திராவிடர் கழகம் காஞ்சி மாவட்டம் மாங்காடு நகரச் செயலாளர் விக்னேஷ் அவர்களின் தலைமையில் தந்தை பெரியார் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை.
மடத்துக்குளம் -
உடுமலை பகுதிகளில் தந்தை பெரியார் 140 ஆவது பிறந்த நாள் விழா மடத்துக்குளம் ஒன்றியம் கடத்தூரில் காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் பிறந்தநாள் விழா நிகழ்வு தொடங்கப்பட்டு துண்டறிக்கை வழங்கப்பட்டது. பிறகு கடத்தூரிலிருந்து இருசக்கர வாகனப் பேரணி துவங்கியது. கடத்தூரில் புறப்பட்ட பேரணி 9:30 மணிக்கு காரத்தொழுவை அடைந்து, கொடியேற்றி,   கழகத் தோழர்களால் திறக்கப்பட்ட பெரியார் படம் முன்பு உறுதியேற்பு முழக்கமிட்டு துண்டறிக்கைகள் வழங்கிய பின்பு புறப்பட்ட பேரணி 10 மணிக்கு கணியூரில் கொடியேற்றி துண்டறிக்கைகள் வழங்கியும்,  10:30க்கு மடத்துக்குளத்தில் துண்டறிக்கை வழங்கியும் தொடர்ந்த பேரணி 11:30க்கு பாலப்பம்பட்டி சமத்துவபுரத்தை அடைந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அங்கிருந்து பெரியகோட்டை, போளரப்பட்டி வழியாக 12:30க்கு சித்தக்குட்டையை அடைந்து கொடியேற்றி, பிறகு 1 மணிக்கு சின்னவீரம்பட்டியில் கொடியேற்றி அடுத்ததாக கோட்டமங்கலம் சமத்துவபுரத்தை அடந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இறுதியாக 2 மணிக்கு உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தை அடைந்து பெரியார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு துண்டறிக்கை வழங்கப்பட்டது. பேரணி சென்ற வழியில் உள்ள கிராமங்களில் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. இன்றைய நிகழ்வு, பேரணியில் மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் மா.மோகன்குமார், செயலாளர் மயில்சாமி, கதிரவன், கணக்கன், பிரபாகரன், உடுமலை நகரத் தலைவர் யாழ் நடராசன், நகர செயலாளர் ரமேஷ், உடுமலை ஒன்றிய தலைவர் விசு, திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவசங்கர்,  அப்பாஸ், சதீஸ்குமார், தாசர்பட்டி பொன்னுச்சாமி, ஜோத்தம்பட்டி இராமகிருஷ்ணன், ஜோத்தம்பட்டி சரவணன், விடுதலை சிறுத்தைகள் மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ராஜசேகர், சிவக்குமார்(ஊடகம்), கடத்தூர் மதிவாணன்( திமுக), பாப்பாங்குளம் திருமூர்த்தி, அருந்ததியர் பாதுகாப்புப்படை திருப்பூர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், இ.காளிமுத்து(வி.சி.க), இல.பாண்டியன்(விசிக)  ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில்

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 140 வது பிறந்த நாளினை  முன்னிட்டு சக்தி கலைக்குழு சார்பில்  பெரியாரின் முகமூடி அணிந்து  தாரை தப்பட்டை முழங்க திராவிடர்கழகம், திமுக, தந்தை பெரியார் திராவிடர் கழகம்,  மார்க்சிஸ்ட் , மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், ஆதித்தமிழர் கட்சி உள்ளிட்ட. அனைத்து கட்சியினர் ஊர்வலமாக வந்து திமுக துணைப்பொதுச்செயலாளர் மானமிகு இ.பெரியசாமி தலைமையில் மானமிகு இ.பெ.செந்தில்குமார்,   மானமிகு அர.சக்கரபாணி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் இரா.வீர பாண்டியன்,
தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் துரை. சம்பத்  உள்ளிட்ட பெரியார் இயக்க தோழர்கள் ஏராளமானோர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை  செலுத்தினர்.

கோவை

தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர்  கோவை.  கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் பெரியார் படிப்பகம் முன்பு இருக்கும் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினர், இவ்விழாவில் கழகத் தோழர்கள் மற்றும் தோழமை கட்சிகளான  திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள், தமிழர் விடியல் கட்சி,  தமிழ் புலிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டனர்  CPI  ML தோழர்கள் உறுதி மொழி ஏற்றனர்.

கோவை - சின்ன வேடம் பட்டியில்,

அறிவாசான் தலைவர் பெரியார் 140வது பிறந்த நாள் படத்திறப்புடன், மாலை அணிவிப்பு, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது . தலைமை தோழர் கா. சோமசுந்தரம் மாநகர தலைவர். தோழர்கள், கி.மாரிமுத்து, வேலுமணி, தமிழ் மாகாளி, பெரியார் பிஞ்சுகள் தமிழிசை,தேன் மலர் , மற்றும் திமுக தோழர்கள் .

கோவை விளாங்குறிச்சி பகுதியில் தோழர் மாகாலி, தோழர் பழனிப்பன் அவர்கள் சார்பில், சரவணம்பட்டி மற்றும் prozone mall எதிரில் அய்யா படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது.

கோவை அன்னூர்

இது தந்தை பெரியாரின் 140 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்டம், அன்னூர் நல்லி செட்டிபாளையம் எல்லாம் பாளையம் ஆகிய மூன்று இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது கழகப் பொதுச் செயலாளர் கோவை  இராமகிருட்டிண கொடி ஏற்றி வைத்தார. அன்னூர் ஒன்றியம் கழக தோழர்களின் முயற்சியில் அச்சம் பாளையம் என்று ஊர் பெயர் மாற்றி பெரியார் நகர் என்று வைக்கப்பட்டுள்ளது பெயர்ப்பலகைக்கு மாலை அணிவித்து கொண்டாடினர் இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட தலைவர் தோழர் ராமசாமி,  வடக்கு மாவட்ட துணை தலைவர்  ஜோதிராம், ஒன்றிய தலைவர் ராமன் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Last modified on Wednesday, 19 September 2018 05:54