app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Thursday, 20 September 2018 08:41

விழுப்புரம் மாவட்டம் கடுவனூர் கிராமத்தில் தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாள் பொதுக்கூட்டம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 19.9.2018. மாலை 5 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் கடுவனூர் கிராமத்தில் நடைபெற்றது.

 

இக் கூட்டத்தில் தோழர் பி. ராமகிருஷ்ணன் தலைமை ஏற்றார், தோழர் காஞ்சி இரா.பரந்தாமன் சிறப்புறை ஆற்றினார் . மாவட்ட அமைப்பாளர் சகா.இளையராஜா, தமிழ் படைப்பாளர் சங்க தலைவர் அரந்க  செம்பியன், சிபிஐ எம்.எல்.மாவட்ட கமிட்டி உறுப்பினர் இரா.கஜேந்திரன், தலைமை அசிரியர் நா.கமலநாதன், தோழர் கோகுல் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

Last modified on Saturday, 22 September 2018 08:26