app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Saturday, 22 September 2018 08:15

7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் 30/09/2018

*தந்தை பெரியார் திராவிடர் கழகம்*

*7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம்*

ராசீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை தமிழக அரசு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அதன் மூலம் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அரசியல் சட்டம் 161 ஆவது பிரிவின்படி அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது,,

அதன்படி தமிழக அரசும் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி,தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்து 15 நாட்களுக்கு மேலாகியும்,தமிழக ஆளுநர் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய உத்திரவிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்,,

*உச்சநீதிமன்ற உத்தரவையும்,8 கோடி தமிழர்களின் உணர்வையும் மதித்து தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து,,,*

*சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் 30/09/2018,ஞாயிறு காலை 10 மணிக்கு நடத்தவுள்ளது,,,*

-கு.இராமகிருட்டிணன்,
-பொதுச் செயலாளர்,
-தந்தை பெரியார் திராவிடர் கழகம்