app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Tuesday, 25 September 2018 06:44

புதுச்சேரியில் பாஜக மோடி அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம் பிரச்சார பயணம்

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் புதுச்சேரியில் மத்திய பார்ப்பன பாஜக மோடி அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம் என்ற தலைப்பில் விளக்க பிரச்சார பயணம் கலை நிகழ்ச்சிகள்  பறை இசை   வீதி நாடகம் என மிக சிறப்பாக  செப்டம்பர் 18,19,20 ஆகிய மூன்று  நடைபெற்றது.


இப் பிரச்சார பயணம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் புதுச்சேரி தலைவர் தோழர் வீர.மோகன் தலைமையில் நடைபெற்றது,  தோழர் இளங்கோ துணைத் தலைவர் மாற்று தோழர் செ.சுரேசு செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
18-09-2018 காலை 10  மணியளவில் புதுச்சேரி பெரியார் சிலைஅருகில்  துவக்க நிகழ்ச்சியாக கழகம் பிரச்சார செயலாளர் தோழர் சீனி விடுதலை அரசு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.


அதை தொடர்ந்து ராஜா திரையரங்கம், ரத்தின திரையரங்கம் சின்னக்கடை ஆகிய பகுதிகளில் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது, மாலை 4 மணி அளவில் முத்தையா பேட்டை ஒளவை திடல்  ஆகிய இடங்களில் வீதி நாடகம்  நடைபெற்றது.


19-09-2018 காலை 10 மணி முதல் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக புதிய பேருந்து நிலையத்திலிருந்து பிரச்சார பயணம் துவங்கியது மீண்டும் மத்திய அரசை கண்டித்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை பொதுமக்கள் இடத்திலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் வீதி நாடகம் நடைபெற்றது மாலை 4 மணி அளவில் ஜிப்மர் மருத்துவமனை அருகில் தெருமுனை பிரச்சாரம் அதை தொடர்ந்து  மீண்டும் அரியாள் குப்பம் , தவள குப்பம் பாகூர் ஆகிய பகுதியில் வீதி நாடகத்துடன் இரண்டாம் நாள் பயணம் நிறைவடைந்தது.


20-09-2018 காலை 10 மணிக்கு முதலியார் பேட்டையில் நடந்த வீதி நாடகத்தை சன் நியூஸ் தொலைக்காட்சியில்  நேரலை ஒளிபரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்திராகாந்தி சாலையில்  தெருமுனை கூட்டம், வில்லியனூர்,  திருவண்டார்கோயில் மற்றும் மதகடிப்பட்டு  பகுதியில் வீதி நாடகம் நடைபெற்றது.
மூன்று நாட்கள்  பிரச்சாரப் பயணத்தில் 16 இடங்களில் பறை இசையுடன் கழக தோழர்கள் உரைவீச்சு வீதி நாடகம் என மிக சிறப்பாக நடத்தினர். பிரச்சாரப் பயணத்தின் போது கழக தோழர்கள் தேஜா, பழனி ராஜசேகர் மற்றும் மணிகண்டன்  மிக சிறப்பாக ரூபாய் 14, 060 நிதி  வசூலை செய்தனர். அனைத்து பகுதிகளிலும் கழகத்தின் பொறுப்பாளர்கள் மிக ஆர்வத்துடன் பணியாற்றினார் கழகத் தோழர் சிவராஜ் மோடி வேடத்திலும்  இனியவன் தமிழிசை வேடத்திலும், தேவதாஸ், முருகன், ஜெகன், தரணி மற்றும் கிருட்ணன் ஆகியோர் எச். ராஜா வேடமணிந்து மிகச் சிறப்பாக மக்களிடத்திலே மோசடி மோதி அரசின் செயல்பாடுகளை  அம்புலப்படுத்தினர் .  திராவிடன் கலைக்குழு சார்பில் பறை இசை தோழர் அ.கங்காதரன் தலைமையில் மிகச் சிறப்பாக எழுச்சியுடன்  நடைபெற்றது.

Last modified on Tuesday, 25 September 2018 07:19

Related Video