app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Sunday, 30 September 2018 16:33

7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநரை வலியுறுத்தி சென்னையில் 30-09-2018 கண்டன ஆர்ப்பாட்டம்

7 தமிழர்களை  விடுதலை செய்ய ஆளுநரை வலியுறுத்தி சென்னையில் 30-09-2018 கண்டன ஆர்ப்பாட்டம்
ராசீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை தமிழக அரசு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அதன் மூலம் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அரசியல் சட்டம் 161 ஆவது பிரிவின்படி அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது,
அதன்படி தமிழக அரசும் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்து 15 நாட்களுக்கு மேலாகியும், தமிழக ஆளுநர் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய உத்திரவிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்,
உச்சநீதிமன்ற உத்தரவையும் ,8 கோடி தமிழர்களின் உணர்வையும் மதித்து தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து,
சென்னையில் இன்று (30/09/2018) தந்தை பெரியார் திராவிடர் கழகம், சார்பில் ஆளுநர் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை, பாண்டிச்சேரி, கோவை, சீர்காழியை, ஈரோடு ( சந்திரன், அரிகிருட்டிணன், கபிலன், தாணுமதி) மற்றும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்து கழக தோழர்கள் சுமார்  250'க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.
Last modified on Wednesday, 03 October 2018 11:15

Related Video