app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Tuesday, 02 October 2018 02:48

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு பொதுக்கூட்டம் 29-9-2018 திருவள்ளூரில் நடைபெற்றது

இந்துக்களே மோடியை நம்பாதீர்கள்!

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற தலைப்பில் 29-9-2018 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திருவள்ளூர் மார்க்கெட் வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சுகேந்திரன் திருவள்ளூர் மாவட்ட தலைவர் தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைமை வகித்தார், முன்னிலை மனோஜ் குமார், ஜெய்சக்தி, ஏ.சக்தி, விக்னேஷ், அப்துல் ரசாக், மாதவன், ஐயப்பன், போல், ஆகாஷ், மோகன், நரேஷ், மற்றும் விஷால் ஆகியோர் முன்னிலை வகித்தனர், வரவேற்புரை தோழர் சுதர்ஷன் திருவள்ளூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர்.
இக்கூட்டத்திற் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் சிறப்புரையாற்றினார் மற்றும் மருத்துவர் எழிலன் இளைஞர் இயக்கம், மா.டைசன் ஒருங்கிணைப்பாளர் தமிழர் விடியல் கட்சி, ச.குமாரன் சென்னை மாவட்ட செயலாளர், பெரியார் செல்வம் நாகை மாவட்ட செயலாளர், விமல் ராஜ் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம், பரந்தாமன் ஆவடி நாகராஜ் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியோர் உரையாற்றினார் நன்றியுரை பாண்டிச்சேரி தோழர் கார்த்திக்.
இக்கூட்டத்தில் புதுக்கோட்டை புதுகை பூபாலன் கலை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் சிறுப்புரையை கருப்பர் கூட்டம் ஊடகம் பதிவு செய்து யூடியூபில் பதிவு செய்ததற்கு திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
Last modified on Thursday, 04 October 2018 03:28

Related Video