app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 03 October 2018 06:52

தோழர் திருமுருகன் காந்தி விடுதலையை பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஸ்டெர்லைட் ஆலை பற்றியும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றியும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பேசியதற்காகவும், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார் என்பதற்காகவும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி  பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

 

தோழர்  திருமுருகன் காந்தி கைதுசெய்யப்பட்டதை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் கழக தோழர்கள் ஆர்பாட்டங்களை நடத்தினர்.    சென்னையில் தோழர் ச.குமரன் உட்பட  தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் 9 பேர்  சென்னை ராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக கைது செய்யப்பட்டு 10 நாட்கள்  புழல் சிறையில் அடைக்கப்பட்னர். கோவையில் தோழர் மோனஜ் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர், மற்றும்  ஆதரவாளர்களுடன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

 

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் மற்றும் மே 17 இயக்க பொறுப்பாளர்கள் கோவை பெரியார் படிப்பகத்தில் முன்பு அமைந்திருக்கும் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினர். சீர்காழியில் தந்தை பெரியார் தி.க சார்பில் தோழர் திருமுருகன் காந்தி விடுதலையை பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

 

திருமுருகன் காந்தி 2-10- 2018 விடுதலை ஆனதை அடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கழகத் தோழர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Last modified on Thursday, 04 October 2018 01:39